கம்பராமாயணம் 4315 · கிட்கிந்தா 9.78

Section கிட்கிந்தா காண்டம் / 9. கார்காலப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1கருந்தகைய தண்சினைய கைதை மடல் காதல்
தருந்தகைய போது கிளையின் புடை தயங்கப்
பெருந்தகைய பொன் சிறகு ஒடுக்கி உடல் பேராது
இருந்த குருகின் பெடை பிரிந்தவரக்ள் என்ன.

பொருள் · Meaning in Tamil

கருந்தகைய - கரிய நிறமுள்ள; தண் சினைய கைதை மடல் - குளிர்ந்த கிளைகளை உடைய தாழை மடல்களின் இடையே; காதல் தரும் தகைய போது - காண்பார்க்கு விருப்பம் விளைக்கும் தன்மையனவாய்த் தோன்றும் தாழை அரும்புகள்; கிளையின் புடை தயங்க - (ஆறுதல் கூறும்) சுற்றத்தாரைப்போலப் பக்கங்களில் சூழ்ந்து விளங்க; குருகின் பெடை - பெண் நாரைகள்; பெருந்தகைய பொன் சிறை ஒடுக்கி - பெருமைக்குரிய அழகிய சிறகுகளை ஒடுக்கிக் கொண்டு; உடல் பேராது - இடம் விட்டுப் பெயராமல்; பிரிந்தவர்கள் என்ன - தலைவரைப் பிரிந்த தலைவியரைப் போல; இருந்த - இருந்தன.

மழைக்காலத்தில் தாழை மிகுதியாகப் பூத்தல் இயல்பாகும். காமத்தை மிகுவிக்கும் மலர்களுள் ஒன்றாகத் தாழை மலர் கருதப்படுவதால் 'காதல் தரும் தகைய போது' என்றார். இம்மலர் மன்மதனின் வாளாயுதம் என்பர் தலைவரைப் பிரிந்த தலைவியர்போலப் பெருமழையால் ஒடுங்கியிருக்கும் பெண்நாரைகளைச் சுற்றி மலர்ந்திருக்கும் தாழை அரும்புகள் அவற்றின் சுற்றம் போலக் காணப்பட்டன. தாழை அரும்புகள் நாரையைப் போன்ற தோற்றத்தனவாதலின் சுற்றமாகக் கூறப்பட்டன. தாழை அரும்புகள் குருகுகள் போல் இருத்தலை 'குருகின் கோளுய்ந்து போகிய முடிங்குபுற இறவின் மோவாயேற்றை. . - தோடுபொதி தாழை வண்டுபடு வான்போது வெறுஉம்", (நற்றிணை - 21/1), அருகு ட் மலரக் கெண்டை குருகென்றஞ்சும்' (பெரியதிருமொழி 5-2-9) என்பவற்றால் அறியலாம். பிரிந்திருக்கும் தலைவியரைச் சுற்றத்தினர் தேற்றுவதும் தலைவியர் ஆற்றாது வருந்துவதும் இயல்பாகும். 'வருதல் தலைவர் வாய்வது நீ நின், பருவரல் எவ்வம் களை மாயோயெனக் காட்டவும் காட்டவும் காணாள் கலுழ் சிறந்து, பூப்போல் உண்கண் புலம்பு முத்துறைப்ப" (முல்லைப் பாட்டு - 20- 23) என்பது காண்க. 'குருகு' பால் பகா அஃறிணைப் பெயராதலின் 'இருந்த' என்ற பன்மை முடிபுகொண்டது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Among the cool-branched, dark screw-pine fronds, with buds
  2. whose beauty stirs desire shining beside them like kinsfolk,
  3. the female herons folded their noble golden wings and sat without stirring,
  4. like women parted from their husbands.

What the poem says

The screw pine, tāḻai, flowers in the rains, and its fragrant buds were thought to stir desire; some call them the love god's sword. Among its dark fronds the female herons sit hunched, wings folded, not moving, like wives grieving for absent husbands.

The pale tāḻai buds, which look rather like herons themselves, cluster round them like relatives trying to console a lonely wife who will not be comforted. Older Tamil poems also liken these buds to herons.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1karun takaiya taṇ ciṉaiya kaitai maṭal kātal
tarum takaiya pōtu kiḷaiyil puṭai tayaṅka
perun takaiya poṟ ciṟai oṭukki uṭal pērātu
irunta kurukiṉ peṭai pirintavarkaḷ eṉṉa.