கம்பராமாயணம் 4316 · கிட்கிந்தா 9.79
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
பதங்கள் - பறவைகளின் ஒலி; முகில் ஒத்த - மேகத்தின் ஒலியை ஒத்தனவாக விளங்க, பல் ஞிமிறு - பலவகைப்பட்ட வண்டுகளின்; இசை பன்ன - (ரீங்காரம்) இசைப்பாடலாக ஒலிக்க; மயில் - மயில்கள்; விதங்களின் நடித்திடும் - பல வகைத் தாள அமைப்புகளுடன் நடனம் செய்கின்ற; விகற்ப வழி - வெவ்வேறு வகைப்பட்ட நாட்டிய நிலைகளில்; மேவும் மதங்கியரை ஒத்த - பொருந்திக் கூத்தாடும் மகளிரை ஒத்தன; உழைக்குலம் - மான் கூட்டங்கள்; மழைக்குலம் முழக்க - மேகக் கூட்டங்களின் முழக்கத்தால் (கலக்கமுற்று); வைகு மர மூலத்து - (மயில்கள்) தங்கப்பெற்ற மரங்களின் அடியில்; ஒதுங்கின - ஒதுங்கி நின்றன.
பதங்கள் - பறவைப் பொதுப்பெயர் இவ்வடசொல் எழுப்பிச் செல்வதென்று பொருள்படும். மதங்கியர் - இளம்வயதுடைய நாட்டிய மகளிர், பதங்கத்தின் ஒலி முழவாக, வண்டுகளின் ரீங்காரம் பாட்டாக, மயில்கள் மதங்கியரைப் போல ஆட, மான்கள் அந்த ஆட்டத்தைப் பார்த்தன என்க. உழைக்குலம் மழைக்குலம் என்ற இடத்து இணையெதுகை நயம் காண்க.
மழைக்காலத்தில் மயில்கள் மகிழ்ந்து ஆடுவதையும் மான்கள் வருந்தி ஒடுங்குவதையும் இச்செய்யுள் புலப்படுத்துகிறது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The cries of the birds were like the clouds; the many bees sang their songs;
- the peacocks were like dancing girls who move through the varied modes
- of dance in many measures; and beneath the trees where the peacocks perched
- the herds of deer took shelter as the massed clouds thundered.
What the poem says
Another dance scene in the woods. Bird calls echo the thunder like drums, the humming bees supply the song, and the peacocks dance like young professional dancers moving through all the measures and poses of their art.
The deer, frightened by the rolling thunder, shelter under the trees where the peacocks roost, as if they were an audience watching the show. The verse sets the joy of the peacocks against the misery of the deer in the rainy season. The rhyme of uḻaikkulam, "herds of deer", with maḻaikkulam, "masses of cloud", is a deliberate sound effect.