கம்பராமாயணம் 4318 · கிட்கிந்தா 9.81

Section கிட்கிந்தா காண்டம் / 9. கார்காலப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1தாமரை மலர்த் தவிசு இகந்து தகை அன்னம்
மாமரன் நிரைத் தொகு பொதும்பர் உழை வைக;
தேமரன் அடுக்கு இதண் இடைச் செறி குரம்பைத்
தூமருவு எயிற்றியரொடு அன்பர் துயில்வுற்றார்.

பொருள் · Meaning in Tamil

தகை அன்னம் - அழகிய அன்னப்பறவைகள்; தாமரை மலர்த் தவிசு இகந்து - தாமரை மலராகிய தங்கள் இருப்பிடத்தை விட்டு நீங்கி; மா மரம் நிரைதொகு - பெரிய மரங்கள் வரிசையாகத் திரண்ட; பொதும்பர் உழை வைக - சோலையில் சென்று தங்க; தேமரம் அடுக்கு - நறுமணம் மிக்க மரக்கட்டைகளை அடுக்கியமைத்த; இதணிடை செறி குரம்பை - பரணில் பொருந்திய குடிசையில்; தூ மருவு எயிற்றியரொடு - வெண்ணிறம் பொருந்திய பற்களையுடைய வேட்டுவப் பெண்களுடனே; அன்பர் துயில்வுற்றார் - அவர்களின் அன்புமிக்க கணவர்கள் உறங்கினார்கள்.

குளிரால் வருந்திய அன்னம் நீரிலுள்ள தாமரை மலரை விட்டுக் குளிர் இல்லாத உயர்ந்த கிளைகளை உடைய மரங்கள் செறிந்த சோலையில் சென்று தங்கியது; பறவைகள் வாராத மழைக்காலத்தில் தினைப்புனம் காக்கும் வேலையின்மையால் வேட்டுவ மகளிரும் வேடர்களும் குளிர்நீங்கப் பரண் குடிசைகளில் உறங்கினர். தவிசு - ஆசனம், தேமரம் - சந்தனம் முதலிய மரங்கள். வைகத் துயில்வுற்றார் எனக் காரண காரியத்தொடர்பின்றிச் செயவெனெச்சம் வினை கொண்டு முடிந்தது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The graceful swans left their seats of lotus flowers
  2. and stayed in the groves where great trees stand massed in rows;
  3. in the snug huts on watch-platforms built of stacked fragrant timber,
  4. the men lay asleep with their women, whose teeth were pure white.

What the poem says

The swans, too cold on the water, leave their lotus beds for the shelter of thick groves of tall trees. In the hill country, the hunters and their white-toothed wives no longer need to guard the millet fields from birds, since no birds fly in this weather.

So the couples sleep together in their snug huts, built on raised platforms of fragrant timber. The verse sets the swans' change of resting place beside the people's.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1tāmarai malart tavicu ikantu takai aṉṉam
māmaram nirait toku potumparuḻai vaika;
tē maram aṭukku itaṇiṭaic ceṟi kurampai
tū maruvu eyiṟṟiyaroṭu aṉpar tuyilvuṟṟār.