கம்பராமாயணம் 4319 · கிட்கிந்தா 9.82
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
வள்ளி புடை சுற்றி - கொடிகளால் பக்கங்களில் சூழப்பெற்று; உயர் சிற்றிலை - உயர்ந்து வளர்ந்துள்ள சிறிய இலைகளை உடைய; மரம் தோறு - மரங்கள் தோறும்; எள்ள அரு மறிக் குருளொடு - (அவற்றின் கீழ்) இகழாமல் பாதுகாத்தற்குரிய ஆட்டுக்குட்டிகளோடு; அண்டர்கள் இருந்தார் - இடையர்கள் தங்கியிருந்தார்கள்; கள்ளரின் ஒளித்து உழல் - திருடர்களைப் போல மறைந்து திரிகின்ற; நெடுங் கழுது ஒடுங்கி - பெரிய பேய்களும் குளிரால் ஒடுங்கி; முள் எயிறு தின்று - முட்கள் போன்ற தம் பற்களைத் தாமே மென்று தின்று கொண்டு; பசி மூழ்கிட இருந்த - மிக்க பசியுடன் இருந்தன.
தன் கீழ் உள்ளார்மேல் நீர்படாமல் காப்பதில் பெரிய இலைகளை உடைய மரத்தினும் சிறிய இலைகளை உடைய மரமே சிறந்ததாதலால் இடையர்கள் கொடிகள் சூழ்ந்த சிற்றிலை மரங்களின் அடியில் தங்கினர். வள்ளி - வள்ளிக் கொடி என்றும், சிற்றிலை - சிற்றிலை மரமென்னும் ஒரு வகை மரம் என்றும் பொருள் கொள்வர். தம்மைத் தாமே பாதுகாத்துக் கொள்ளும் ஆற்றலற்றன என்பதால் ஆட்டுக் குட்டிகள் இகழாமல் பாதுகாத்தற்கு உரியனவாகின்றன. அவற்றை இடையர்கள் உடன் கொண்டு சென்றனர் என்பதால் அவற்றின் அருமை புலனாகும். குருளை என்பது குருள் என விகாரப்பட்டு வந்தது. நெடிதாகிய பேயும் மழையால் ஒடுங்கி தோன்றிற்று என்பார் 'நெடுங்கழுது ஒடுங்கி' என்றார். மழையால் பேய்களும் வெளிக்கிளம்ப முடியாது ஒடுங்கிப் பசியில் மூழ்கிப் பற்களை மென்று தின்று கொண்டிருந்தன என மழைமிகுதியை உணர்த்தினார். மழையால் பேய் வருந்துவதைப் 'பெயலு மோவாது கழுது கண் பனிப்ப வீசும்' (குறுந் - 161) என்ற தொடர் உணர்த்தும். 'பசிக்கலைந்து பாதி நாக்கும் உதடுகளில் பாதியும் தின்றொறுவாயானேம்' (கலிங். பரணி - 2/7) என்பது ஈண்டு ஒப்பு நோக்கத்தக்கது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Under every tall small-leaved tree wrapped round with creepers,
- the herdsmen sat with their precious young lambs;
- the tall ghouls that roam in hiding like thieves shrank back
- and sat chewing their own thorn-sharp teeth, sunk in hunger.
What the poem says
Herdsmen shelter from the rain under small-leaved trees thick with creepers, which keep off the water better than broad-leaved ones. They keep their lambs close beside them, since the young animals cannot protect themselves.
Even the ghouls, which usually prowl about by stealth like thieves, cannot go out in such weather. They huddle in hiding, starving, and gnaw their own sharp teeth for want of anything else to eat. The grotesque image shows how relentless the rain is.