கம்பராமாயணம் 4320 · கிட்கிந்தா 9.83

Section கிட்கிந்தா காண்டம் / 9. கார்காலப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1சரம் பயில் நெடுந் துளி நிரந்த புயல் சார
உரம் பெயர்வு இல் வன் கரி கரந்து உற ஒடுங்கா
வரம்பு அகல் நெடும் பிரசம் வைகல் பல வைகும்
முரம்பினில் நிரம்பல முழைஞ்சு இடை நுழைந்த.

பொருள் · Meaning in Tamil

நிமிர்ந்த புயல் - (வானத்தில்) உயர்ந்து விளங்கிய மேகங்களிலிருந்து; சரம்பயில் நெடுந்துளி - அம்புகளை ஒத்த பெரிய மழைத் தாரைகள்; சார - தம்மேல் விழுவதால்; உரம் பெயர்வு இல் வன்கரி - மன வலிமை நீங்குதல் இல்லாத உடல் வலிமை மிக்க யானையும்; ஒடுங்கா - (மழையினால்) ஒடுங்கி; வரம்பு அகல் நறும் பிரசம் - அளவற்ற பெரிய தேன்கூடுகள்; பலவைகல் வைகும் - பல நாட்களாக அமையப்பெற்ற; முரம்பினில் - மேட்டு நிலங்களில்; நிரம்பல - (கூட்டமாகத்) தங்க மாட்டாதனவாய்; கரந்து உற - (மழை நீர்தம்மேல்படாதபடி) மறைந்து தங்க; முழைஞ்சிடை நுழைந்த - மலைக்குகைகளில் நுழைந்தன.

மழைத் தாரைகள் அம்புகளை ஒத்து விளங்கின என்பதைச் 'சரம்பயில் நெடுந்துளி' என்றார். 'தண்துளி பளிக்குக்கோல் போல் தாரையாய்ச் சொரிந்து' (சீவக. 508) என்ற அடியைக் காண்க. யானையின் மனவலிமையும் உடல் வலிமையும் 'உரம் பெயர்வு இல் வன் கரி' எனச் சுட்டப்பட்டது. அத்தகைய யானைகளும் தாம் வாழ்ந்த இடங்களை விட்டு ஒடுங்கிக் குகைகளில் நுழைந்தன என்பதால் மழையின் மிகுதியும் குளிரும் உணர்த்தப்பட்டன. பிரசம் - தேன்; இங்குத் தேன்கூட்டைக் குறித்தது. உயரத்தில் வந்து எடுப்பவர் இன்மையால் தேன்கூடுகள் பல நாட்களாகக் கற்பாறையாகிய மேட்டு நிலங்களில் கட்டியபடியே அழியாமல் இருந்தன என்க.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As the long arrow-like drops from the massed clouds struck them,
  2. even the mighty elephants, whose strength never wavers, shrank back to hide;
  3. not crowding onto the rocky uplands where boundless fragrant honeycombs
  4. had hung for many days, they pushed their way into the caves.

What the poem says

The rain falls in long shafts like arrows. Even the great elephants, whose courage and strength never fail, give up and shelter in mountain caves rather than stand on the rocky high ground.

On those heights huge honeycombs have hung untouched for days, because in this weather no one climbs up to gather honey. Elephants being driven into caves shows how heavy and cold the downpour is.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1caram payil neṭun tuḷi niranta puyal cāra
uram peyarvu il vaṉ kari karantu uṟa oṭuṅkā
varampu akal naṟum piracam vaikal pala vaikum
murampiṉil nirampala muḻaiñciṭai nuḻainta.