கம்பராமாயணம் 4321 · கிட்கிந்தா 9.84

Section கிட்கிந்தா காண்டம் / 9. கார்காலப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1இத்தகைய மாரி இடை துன்னி இருள் எய்த
மத்தக மணிக் குறுநகைச் சனகன் மான்மேல்
உய்த்த உணர்வத்தினன் நெருப்பு இடை உயிர்ப்பான்
வித்தகன் இலக்குவனை முன்னினன் விளம்பும்.

பொருள் · Meaning in Tamil

இத்தகைய மாரியிடை - இத்தன்மை வாய்ந்த மழைக்காலத்தில்; இருள் துன்னி எய்த - இருந்து செறிந்து வந்தடைய; வித்தகன் - அறிவில் சிறந்த இராமன்; மைத்தகு மணி - மணி என்று சொல்லத்தக்க கண்ணின் கருமணியையும், குறுநகை - புன்சிரிப்பையும் உடைய, சனகன் மான்மேல் - சனகன் பெற்ற மகளான மான் போன்ற பார்வையுடைய சீதை மீது; உய்த்த உணர்வத்தினன் - செலுத்திய உணர்வுகளை உடையவனாய், நெருப்பிடை உயிர்ப்பான் - நெருப்புப் போன்று இடையிடையே பெருமூச்சு விடுபவனாய், இலக்குவனை முன்னினன் - இலக்குவனை நோக்கி, விளம்பும் - (சில சொற்களைச்) சொல்லலானான்.

சீதையின் கரிய கண்களின் பார்வையிலும், புன்சிரிப்பின் அழகிலும் இராமனுக்கு உள்ள ஈடுபாடு விளங்க 'மைத்தகு மணிக்குறுநகைச் சனகன் மான்' என்றார். இராமனது பிரிவுத்துன்பத்தை 'உய்த்த உணர்வத்தினன், நெருப்பிடை உயிர்ப்பான்' என்னும் தொடர்கள் உணர்த்தும்.

வித்தகன் - அறிவில் சிறந்தவன்; ஈண்டு இராமனைக் குறித்தது. "பத்துடை அடியவர்க்கு எளியவன், பிறர்க்கரிய வித்தகன்" (திருவாய்மொழி - 1 - 3 - 1), 'வித்தகனே இராமாவோ' (பெரியாழ் - 3 - 10 - ) என்ற அடிகள் ஈண்டு ஒப்பு நோக்கத்தக்கன; இராமபிரானையே பெரியாழ்வார் 'வித்தகன்' என்று குறித்தார். அக் குறிப்பு கவிச்சக்கரவர்த்தியின் ஆட்சிக்கு வலிமையும் வனப்பும் சேர்க்கின்றது.

சீதையைப் பிரிந்து இராமன் மழைக்காலத்தில் வருந்தியதையும், இலக்குவன் அவ்வப்போது தேற்றுவதையும் முதல் நூலிலும் காணலாம். உணர்வினன் என்பது அத்துச் சாரியை பெற்று 'உணர்வத்தினன்' என ஆயிற்று.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. In the midst of such a rainy season, as darkness gathered thick and came on,
  2. with his feelings fixed on Caṉakaṉ's fawn, whose dark-gemmed eyes and gentle smile he loved,
  3. breathing out sighs like fire,
  4. the wise one turned to Ilakkuvaṉ and spoke.

What the poem says

In the rainy season on Mount Mālyavān, while they wait for the monsoon to pass before searching for Cītai, Irāmaṉ is consumed by grief. This verse introduces a sequence of laments he speaks to his brother Ilakkuvaṉ.

Cītai is called 'Caṉakaṉ's fawn': the daughter of King Caṉakaṉ, with a doe's gaze. Her dark pupils and slight smile are singled out to show how deeply Irāmaṉ is attached to her. His sighs 'like fire' express the burning pain of separation. The word for 'wise one', vittakaṉ, is also used of Rāma by the Vaishnava saints.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1it takaiya māriyiṭai tuṉṉi iruḷ eyta
mait taku maṇik kuṟu nakaic caṉakaṉ māṉmēl
uytta uṇarvattiṉaṉ neruppiṭai uyirppāṉ
vittakaṉ ilakkuvaṉai muṉṉiṉaṉ viḷampum.