கம்பராமாயணம் 4322 · கிட்கிந்தா 9.85
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
மழைக்கரு மின் எயிற்று - மேகம் போன்ற கருநிறத்தையும் மின்னலைப் போன்ற பற்களையும் உடைய; அரக்கன் - அரக்கனாகிய இராவணன்; வஞ்சனை இழைப்ப - வஞ்சனை செய்ய; அருங் கொங்கையும் - அரிய முலைகளை உடைய சீதையும்; எதிர்வுற்று - (அவ் வஞ்சனைக்கு) இலக்காகி; இன்னலின் உழைத்தனள் - துன்பத்தால் வருந்தியவளாய், உலைந்து உயிர் உலக்கும் - வாடி உயிர் அழிவாள்; எனக்கும் - (அவளைப் பிரிந்திருக்கும்) எனக்கும்; ஒன்றினும் பிழைப்பு அரிது - எந்த ஒரு வகையிலும் (துன்பத்தினின்று) பிழைத்தல் அரிதாக இருக்கின்றது; இது என்ன பெற்றியோ - இது என்ன தன்மையோ?
மேகம் போலக் கரிய நிறமும், மின்னல் போன்ற பற்களையும் உடைய இராவணனது வஞ்சனையில் அகப்பட்டுச் சீதை வருந்தி உயிர் அழிதல் போலத் தானும் கரிய நிறத்தையும் மின்னலையும் உடைய மேகத்தின் கொடுமைக்கு இலக்காகி வருந்துவதாக இராமன் குறிப்பால் உணர்த்தியது நயம் மிக்கதாகும். தம்மை வருத்திய பொருள்களில் உள்ள ஒற்றுமையைக் காட்டி 'இது என்ன இயல்போ?' என இரங்கிக் கூறினான். 'உயிர் உலக்கும்' 'ஒன்றினும் பிழைப்பு அரிது' என்னும் தொடர்கள் பிரிவால் ஏற்படும் பெருந்துன்பத்தை விளக்கி நிற்பன.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'The demon dark as rain-cloud, with teeth like lightning, worked his deceit;
- she of the precious breasts fell into it, and toiling in misery
- she will wither and her life will perish; and for me too, by any means,
- escape is hard. What kind of fate is this?'
What the poem says
Irāmaṉ, speaking to Ilakkuvaṉ, draws a bitter parallel. Irāvaṇaṉ, black as a cloud with teeth flashing like lightning, has trapped Cītai by deceit and she must be wasting away. Irāmaṉ himself is now tormented by the rain-cloud, equally black and lit by lightning.
The same pair of images, darkness and lightning, describes both the demon who wronged her and the monsoon that torments him, so the two separated lovers suffer from look-alike enemies. He ends by asking what strange nature this is.