கம்பராமாயணம் 4323 · கிட்கிந்தா 9.86

Section கிட்கிந்தா காண்டம் / 9. கார்காலப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

தூ நிறச் சுடு சரம் - தம்முனைகளில் ஊன் படிந்தனவாய்ப் பகைவர் மார்பைத் துளைக்கவல்ல அம்புகள்; தூணி தூங்கிட - (செயலற்று) அம்பறாத்தூணியில் தூங்கிக் கிடக்க; வான் உறப்பிறங்கிய - வானளாவ உயர்ந்து விளங்கிய; வயிரத் தோளொடும் - உறுதியுள்ள புயங்களுடனே; யான் இதுவும் உறக்கடவதே - நான் இத்தகைய துன்பத்தையும் அனுபவிக்க வேண்டுமோ? இந்நிலை - எனக்கு ஏற்பட்டுள்ள இந்த நிலைமை; வேல் நிறத்து உற்றது ஒத்துழியும் - வேல் என் மார்பகத்துப் பாய்ந்தது போன்றிருக்கவும்; வீகிலேன் - நான் இறவாமல் இருக்கின்றேனே!

பகைவர் மார்பில் பட்டு ஊன் தோய்ந்திருத்தல் பற்றித் 'தூநிறச் சரம்' என்றும், பகைவர்களைச் சுடவல்லது ஆதலின் 'சுடுசரம்' எனவும் சிறப்பித்தார். 'நின்கைச் சுடு சரம் அனைய சொல்லால்' (472) என்றதும் காண்க. தூங்குதல் - தொங்குதல், செயலற்றுக் கிடத்தல் என இரு பொருள்பட அமைந்துள்ளது. பகைவரை வெல்லவல்ல படைவலிமையும் தோள்வலிமையும் பெற்றிருந்தும் தீங்கு செய்தவனைத் தண்டிக்காது துன்பத்தை அனுபவிக்கும் நிலை தனக்கு வருதல் வேண்டுமா என இராமன் கலங்கினான். இந்நிலை தனக்கு வரலாகாது என்பானாய் 'இதுவும் உறக்கடவதே' என்றான். தன் தோளின் உயர்வும் வலிமையும் தோன்ற 'வானுறப் பிறங்கிய வயிரத் தோள்' என்றான். மார்பில் வேல் பட்டாற்போல் இவ்வளவு துன்பத்தை அனுபவித்துக் கொண்டு வாழ்தலும் வேண்டுமோ, இறத்தலே ஏற்றதன்றோ என இராமன் வருந்தும் நிலையைக் காண்கிறோம். ஒத்துழி - ஒத்த உழி என்பதன் தொகுத்தல் - ஒத்துழியும் - உம்மை இழிவு சிறப்பும்மை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'While my burning arrows, stained with flesh, hang idle in the quiver,
  2. and with these diamond-hard shoulders that rise to touch the sky,
  3. must I suffer even this? Though this state
  4. is like a spear driven into my chest, I do not die.'

What the poem says

Irāmaṉ contrasts his power with his helplessness. His arrows, their tips darkened with the flesh of enemies, simply hang in the quiver; the Tamil verb means both 'hang' and 'lie idle'. His shoulders tower to the sky, yet he has not punished the one who wronged him.

The pain feels like a spear in the chest, and he wonders bitterly why he goes on living when death would seem more fitting.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'tū niṟac cuṭu caram tūṇi tūṅkiṭa
vāṉ uṟap piṟaṅkiya vayirat tōḷoṭum
yāṉ uṟak kaṭavatē ituvum? in nilai
vēl niṟattu uṟṟatu ottuḻiyum vīkilēṉ.