கம்பராமாயணம் 4326 · கிட்கிந்தா 9.89
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
துயரின் வைகுவேன் - துயரத்தில் தங்கியிருப்பேனாகிய நான்; மறந்து இருந்து உய்கிலேன் - சீதையை மறந்து இருந்து உயிர் பிழைக்க வல்லேன் அல்லன்; மாரி ஈது எனின் - கூதிர்க்கால மழை என்னை இவ்வாறு வருத்துமாயின்; இறந்து விண் சேர்வது - நான் இறந்து விண்ணுலகத்தை அடைவது; சரதம் - உறுதியாகும்; இப்பழி - (சீதையை இராவணன் கவர்ந்து சென்றதால் எனக்கேற்பட்டுள்ள) இந்தப் பழிச் சொல்லை; பிறந்து பின் தீர்வலோ - மற்றொரு பிறவியெடுத்து (அவனோடு போர் செய்து) தீர்த்துக் கொள்வேனோ? பின்னர் - (அல்லது) அப்பிறவியில்; துறந்து சென்று - இல்லறத்தைத் துறந்து சென்று; அன்னது உறுவலோ - அப்பழிதீரும் வகையை அடையப் பெறுவேனோ?
இராமனுக்குச் சீதை மேலுள்ள அன்பை, 'மறந்திருந்து உய்கிலேன்' என்ற தொடர் உணர்த்தும். பிரிவுத்துன்பத்தை மிகுவிக்கும் வகையில் மழை பெய்யுமாயின் தான் இறப்பது உறுதி எனவும் உரைத்தான். 'மறந்திருந்து உய்கிலேன்' என்ற தொடர் இராமன் இப்பிறவியில் துறக்கமாட்டாமையை உணர்த்தும். இப்பிறவியில் இப்பழி தீரப்பெறுதல் இயலாதோ எனக் கலங்கினான். அடுத்த பிறவியிலும், முன்னைப் பிறவியில் நிகழ்ந்ததை நினைவில் கொண்டு இராவணனை வென்று பழிநீங்கல் இயலுமா என்ற ஐயத்தால் 'பிறந்து பின் தீர்வலோ?' என்றான். அல்லது துறவுமேற்கொண்டால், முந்திய பிறவியின் தொடர்புகள் நீங்குமாதலின், பழியும் பகையும் நீங்கிவிடும் என்பதால் 'துறந்து சென்று அன்னது உறுவலோ?' என்றான். இப்பழியைத் தீர்ப்பது எங்ஙனம் என்றே கலங்கினான் இராமன்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'I cannot forget her and survive; if this is what the rain does,
- it is certain I will die and go to heaven. This disgrace,
- shall I be born again and wipe it out then? Or afterwards,
- renouncing all, shall I reach that end? I who live on in sorrow!'
What the poem says
Irāmaṉ cannot forget Cītai and live, and if the rains keep tormenting him he is sure he will die. What troubles him most is the disgrace of her abduction, which he has not avenged.
He wonders in anguish whether he would have to be born again to settle the score with Irāvaṇaṉ, or whether in that next life he would renounce the world so that old ties and old shame fall away. Underneath both questions is one: how can this disgrace ever be removed?