கம்பராமாயணம் 4334 · கிட்கிந்தா 9.97
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
திரைசெய் அத்திண்கடல் - அலைகள் வீசுகின்ற அந்த வலிய பாற்கடல்; அமிழ்தம் - தன்னிடமுள்ள அமிழ்தத்தை; செங்கணான் - சிவந்த கண்களையுடைய திருமால்; உரைசெய - (கொடு என்று) சொன்ன அளவிலே; தரினும் - கொடுக்கக் கடவதாயினும்; அத்தொழில் - அங்ஙனம் ஆணையால் எளிதில் பெறுவதை; உவந்திலன் - விரும்பாதவனாய்; வரை முதல் கலப்பைகள் - மந்தரமலை முதலிய கருவிகளை; மாடுநாட்டி - அக்கடலிடத்து நாட்டி; தன் குரை மலர்த் தடக்கையால் - (தோள் வளை முதலிய) அணிகலன்கள் ஒலிக்கப் பெற்ற செந்தாமரை மலர்போன்ற பெரிய கைகளால்; கடைந்து கொண்டனன் - (அக்கடலைக்) கடைந்தே அமிழ்தத்தைப் பெற்றுக் கொண்டான்.
திருமால் தன் ஆணைக்கு அடங்கி நடக்கும் பாற்கடலிடத்து எளிதில் அமிழ்தத்தைப் பெறலாம்; எனினும் அங்ஙனம் பெறாது. மத்து முதலிய கருவிகளைக் கொண்டு தன் கையால் கடைந்தே அமிழ்தத்தைப் பெற்றான். அதுபோன்றே இராமன் நினைத்தால் வேறொருவர் துணையின்றியே உலகையும் உயிர்களையும் அழித்துப் பிராட்டியைக் காணும் ஆற்றல் பெற்றவன்; எனினும் வானரப்படைகளின் துணை கொண்டு தேடி முயன்று பகைவரை வென்று சீதையைக் காண்பதே முறையானது என்று இலக்குவன் உத்தான இச்செய்யுள் பிறிது மொழிதலணி. திருமால் பாற்கடல் கடைந்ததை "வடவரையை மத்தாக்கி வாசுகியை நாணாக்கிக் கடல் வண்ணன் பண்டொருநாள் கடல்வயிறு கலக்கினையே" (சிலப் - ஆய்ச்சி. 32) என்ற அடிகளும் உணர்த்தும். 'பூவிற்குத் தாமரையே' (திருவள்ளுவ மாலை. 38) 'பூவினிற் கருங்கலம் பொங்கு தாமரை' (தேவா. 1182. 2) என்றாராகலின் மலர் இங்கே தாமரையைக் குறித்து நின்றது. அ - பண்டறிசுட்டு. தேவரும் அரக்கரும் பல காலம் கடைந்த கடலாதலின் 'திண்கடல்' எனப்பட்டது. வரை முதல் கலப்பைகள் - மந்தரமலை, வாசுகி, மேரு முதலியன. செங்கணான் - சிவந்த வரிகள் படர்ந்த கண்களை உடையவன். இங்கே திருமாலைக் குறித்தது. 'கண்ணும் திருவடியும் கையும் இருவாயும் செய்ய கரியவனை' என்கிறது சிலப்பதிகாரம் (ஆய்ச்சி. 36). குரைத்தல் - ஒலித்தல் - கடகம், வாகுவலயம் போன்ற அணிகள் ஒலிக்கப்பெறல்; வருந்திக் கடைதற்குப் பொருந்தாத மென்மையான கை என்பதை 'மலர்க்கை' என்ற தொடர் உணர்த்திற்று. எத்துணை ஆற்றலுடையராயினும் ஒரு செயலைத் திறம்படப் புரியக் காலமும் கருவியும் இன்றியமையாதன என்பது இப்பாடலில் உணர்த்தப்பட்டது. 'ஞாலம் கருதினும் கைகூடும், காலம் கருதி இடத்தால் செயின்' (குறள் - 484) என்றது காண்க.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'Though that strong, wave-tossed ocean would have yielded its nectar
- the moment the red-eyed one spoke the word, he took no pleasure in that way;
- he planted the mountain and the other tools beside it
- and with his own great flower-like hands, jewels ringing, he churned and won it.'
What the poem says
Ilakkuvaṉ argues by example. Tirumāl (Vishnu), the red-eyed god, could simply have commanded the Ocean of Milk to give up its nectar. Instead he set up Mount Mantara as the churning stick, with the serpent Vācuki and other tools, and churned it with his own hands.
The lesson, told through a parallel story, is that Irāmaṉ too could destroy everything by his power alone, but the right way is to search with the monkey army's help and win Cītai back in battle. However mighty one is, a task needs the right time and the right means.