கம்பராமாயணம் 4335 · கிட்கிந்தா 9.98

Section கிட்கிந்தா காண்டம் / 9. கார்காலப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1மனத்தினின் உலகு எலாம் வகுத்து வாய்ப் பெயும்
நினைப்பினன் ஆயினும் நேமியான் நெடும்
எனை பல படைக்கலம் ஏந்தி யாரையும்
வினைப் பெரும் சூழ்ச்சியின் பொருது வெல்லுமால்.

பொருள் · Meaning in Tamil

நேமியோன் - (மற்றும்) அத்திருமால், மனத்தினின் - திருவுள்ளத்தில் நினைத்த மாத்திரத்தில்; உலகு எலாம் வகுத்து - உலகங்களை எல்லாம் படைத்து; வாய்ப் பெயும் - வாயில் போட்டு உண்ணத்தக்க; நினைப்பினன் ஆயினும் - சங்கற்ப வலிமை உடையவனாயினும்; எனைப்பல நெடும் படைக்கலம் ஏந்தி - (அங்ஙனம் செய்யாமல்) வேறு பல பெரிய ஆயுதங்களைக் கையிற் கொண்டு; யாரையும் - (கொடியவர்கள்) அனைவரையும்; வினைப் பெரும் சூழ்ச்சியின் - போர்த் தொழிலுக்குரிய சூழ்ச்சிகளோடு; பொருது வெல்லும் - போர் செய்தே வெற்றி கொள்வான்.

தான் பரமபதத்தில் அல்லது பாற்கடலில் இருந்தவாறே தன் மனத்தால் நினைத்த அளவில் சங்கற்ப மாத்திரையில் - அனைவரையும் அழிக்கவல்லவனாயினும், திருமால் அங்ஙனம் செய்யாது பல படைக்கருவிகளைக் கொண்டு பகைவர்கள் உள்ள இடம் சென்று இடத்திற்கேற்பச் சூழ்ச்சித் திறத்தோடு போர் செய்தல் அவதார தத்துவம். சூழ்ச்சி - தந்திரம்; கொடியவர்கள் செய்யும் மாயைகளுக்கு ஏற்ப மாயை செய்து போர்புரிதல்.

உலகு - இடத்தையும் உயிர்களையும் உணர்த்திற்று. வகுத்தல் - படைத்தல்; வாய்ப்பெய்தல் - அழித்தல். 'உண்டும் உமிழ்ந்தும் கடந்தும் இடந்தும் கிடந்தும் நின்றும்' (திருவாய் - 4 - 5 - 10) என்றது காண்க. பெயும் - பெய்யும்; ப்ட் பகு விகாரம். நேமியான் - சக்கரபாணி. பிறிதுமொழிதலணி.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'Though by thought alone he can shape all the worlds and swallow them up,
  2. such is his power of will, yet the wheel-bearer
  3. takes up many great weapons of every kind, and all foes
  4. he meets in battle and conquers by the great craft of war.'

What the poem says

Ilakkuvaṉ gives a second example. Tirumāl, who holds the discus, could create every world and swallow it again just by willing it, yet when he comes down in his incarnations he takes up weapons, goes to where his enemies are, and defeats them in real battle, using strategy and answering their tricks with his own.

This is the logic of the avatar: the god works through action in the world, not by bare will. Irāmaṉ, by implication, should do the same.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1maṉattiṉiṉ ulaku elām vakuttu vāyp peyum
niṉaippiṉaṉ āyiṉum nēmiyōṉ neṭum
eṉaip pala paṭaikkalam ēnti yāraiyum
viṉaip peruñ cūḻcciyiṉ porutu vellumāl.