கம்பராமாயணம் 4337 · கிட்கிந்தா 9.100

Section கிட்கிந்தா காண்டம் / 9. கார்காலப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

ஆகுநர் யாரையும் - (நமது நோக்கத்திற்கு) உதவத்தக்கவர் எல்லோரையும்; துணைவர் ஆக்கி - துணைவர்களாக ஆக்கிக் கொண்டு; எண்ணுவ - ஆலோசிக்க வேண்டிய செய்திகளை; சேகு உறப் - உறுதியாக; பலமுறை தெருட்டி - பலமுறை ஆலோசித்துத் தெளிந்து; பின் - பிறகு; ஏகுறு நாளிடை எய்தி - (செயல்மேல்) செல்லும் நாளில் செயலாற்றுமிடத்தை அடைந்து; செய்தபின் - (செயலைச்) செய்த பிறகு; வாகை என்று ஒரு பொருள் - வெற்றி என்று சொல்லக்கூடிய ஒரு பொருள்; வழுவற்பாலதோ - தவறக்கூடியதோ? (அன்று).

உதவத்தக்கவர்களையே துணையாகக் கொள்ள வேண்டுதலின் 'ஆகுநர் யாரையும் துணைவர் ஆக்கி' என்றான். 'தக்கார் இனத்தனாய்த் தானொழுக வல்லானைச் செற்றார் செயக்கிடந்ததில்' என்பது குறள். (எண். 446). 'ஆகுநர் யாரையும் துணைவராக்கி' என்றதால் தனக்கு உதவாதவரை நீக்குதலும் புலப்படுத்தியவாறாயிற்று. அவதார நிகழ்ச்சிப்படி வாலி இராமனுக்கு உதவ வேண்டியிருக்க அவன் இராவணனுக்கு நண்பனாகிவிட்டால் இராமன் அவன் நட்பினை நாடாமை அரசியல் சூழ்ச்சிக்கு ஏற்ற செயலே ஆயிற்று. 'பிரித்தலும் பேணிக் கொளலும் பிரிந்தார்ப் பொருத்தலும் வல்லதமைச்சு' (குறள் - 633) என்றது காண்க. சேகு - மரவயிரம்; இங்கு உறுதிக்கு இலக்கணை. பலமுறை தெருட்டி - பலமுறை ஆராய்ந்து தெளிதல்; 'எண்ணித் துணிக கருமம்' என்பது வள்ளுவம். (குறள் 467). காலம் கருதி இடத்தால் செய்ய வேண்டுமாதலின் 'ஏகுறு நாளிடை எய்தி' என்றான். 'தெரிந்த இனத்தொடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்கு அரும் பொருள் யாதொன்றும் இல்' (குறள் 462) என்பதால் 'வாகை என்றொரு பொருள் வழுவற்பாலதோ?' என்றான். வெற்றி பெற்றவர் வாகைப்பூச் சூடுதல் மரபு ஆதலால் வெற்றிக்கு வாகை என்பது பெயராயிற்று. ஒரு செயல் வெற்றி பெறுதற்குரிய வழி இப்பாடலில் கூறப்பட்டது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'Making allies of all who can be of use, and then,
  2. on the day set for marching, reaching the field, the matters to be weighed
  3. thought through firmly, many times over until clear, once the deed is done,
  4. can the thing called victory ever slip away?'

What the poem says

Ilakkuvaṉ sets out the method for success: gather every useful ally, think the plan through many times until it is clear, choose the right day and place, then act. Done this way, victory cannot fail.

The commentary links each step to the Tirukkuṟaḷ on statecraft, which teaches choosing worthy companions, deliberating before acting, and acting at the right time and place. It also notes that Irāmaṉ allied with Cukkirīvaṉ rather than Vālī, who was a friend of Irāvaṇaṉ. Vākai, the name of a flower worn by victors, is used here to mean victory.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1ākunar yāraiyum tuṇaivar ākkip piṉ
ēkuṟu nāḷiṭai eyti eṇṇuva
cēku uṟap pal muṟai teruṭṭic ceytapiṉ
vākai eṉṟu oru poruḷ vaḻuvaṟpālatō?