கம்பராமாயணம் 4339 · கிட்கிந்தா 9.102

Section கிட்கிந்தா காண்டம் / 9. கார்காலப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'பைந் தொடிக்கு இடர் களை பருவம் பையவே
வந்து அடுத்து உளது; இனி வருத்தம் நீங்குவாய்!
அந்தணர்க்கு ஆகும் நாம் அரக்கர்க்கு ஆதுமோ?
சுந்தரத் தனு வலாய்! சொல்லு நீ'என்றான்.

பொருள் · Meaning in Tamil

பைந்தொடிக்கு இடர்களை பருவம் - பசும்பொன்னாலாகிய தொடியணிந்த பிராட்டிக்கு ஏற்பட்ட துன்பத்தை நீக்குதற்குரிய காலம்; பையவே வந்து அடுத்துளது - மெல்லவே வந்து சேர்ந்துளது; இனி வருத்தம் நீங்குவாய் - (அதனால்) இனிமேல் துன்பத்தைத் தவிர்ப்பாய். அந்தணர்க்கு ஆகும் நாம் - முனிவர்களுக்கு உதவுவதற்காக வந்துள்ள நாம்; அரக்கர்க்கு ஆகுமோ - அரக்கர்களுக்கு இலக்கு ஆவோமா? சுந்தரத் தனு வலாய் - அழகிய விற்போரில் வல்லவனே! நீ சொல்லு - நீ சொல்வாயாக; என்றான் - என்று (இலக்குவன்) கேட்டான்.

கூதிர்ப்பருவத்திற்கு அடுத்து வரும் பருவம் சீதையின் துன்பத்தைத் நீக்கும் பருவமாகும் என்பதால் 'இடர்களை பருவம்' என்றான். இடர் களைதலாவது இராவணனைக் கொன்று சீதையை மீட்டலாகும். பருவம் வந்துளது என்னாது பருவம் வந்து அடுத்துளது என்ற நயம் காண்க. அதற்கேற்ப அடுத்த பாடலில் 'அறுதியை அடைந்தது அப்பருவம்' என்றான். "முனிவர்களுக்குத் தீங்கு செய்கிற அரக்கர்களை அழித்து அவர்கட்கு உதவியாக இருக்கவேண்டிய நாம் அரக்கர்கள் செய்யும் துன்பங்களில் ஆழ்ந்துவிடுதல் தகுதியோ? அவ்வாறு துன்பத்தால் சோர்கையில் அந்தணர்களுக்கு உதவவும் இயலாது போய்விடுமன்றோ' எனத் தேறுதல் உரைத்தான். வில்லுக்குச் 'சுந்தரம்' (அழகு) என்றது அறந்தலை நிறுத்தலும், செந்நெறி செலுத்தலும் முதலியன (5885) காண்க. ஆகும் - முன்னது பெயரெச்சம். பின்னது - தன்மைப் பன்மை எதிர்கால வினைமுற்று. "அரக்கரை ஆசு அறக்கொன்று, நல் அறம் புரக்க வந்தனம்' எனும் பெருமை பூண்ட நாம் (6430) "மறந்த புல்லர் வலி தொலையேன் எனின். . . பிறந்து யான் பெறும் பேறு என்பது யாவதோ?", ஆர் அறத்தினொடு அன்றி நின்றார் அவர் வேர் அறுப்பென்' (2649, 2652) என்பன ஈண்டு நோக்கத்தக்கன.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'The season to end the sorrow of her with the golden bangles
  2. has slowly come close; cast off your grief now!
  3. We who are here for the sake of the sages, shall we fall prey to the demons?
  4. You who are master of the beautiful bow, tell me,' he said.

What the poem says

Ilakkuvaṉ ends his consolation. The season after the cold rains, when they can act to free Cītai by killing Irāvaṇaṉ, is slowly approaching. Irāmaṉ should put away his grief.

He reminds his brother why they are in the forest: to protect the sages from the demons. If they sink into the misery the demons have caused, they cannot help anyone. Irāmaṉ himself had vowed to the sages to destroy all who turn against dharma.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'paintoṭikku iṭar kaḷai paruvam paiyavē
vantu aṭuttuḷatu; iṉi varuttam nīṅkuvāy!
antaṇarkku ākum nām arakkarkku ākumō?
cuntarat taṉu valāy! collu nī' eṉṟāṉ.