கம்பராமாயணம் 4340 · கிட்கிந்தா 9.103

Section கிட்கிந்தா காண்டம் / 9. கார்காலப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

அஃது உறுதியே என - (இவ்வாறு இலக்குவன் கூறிய உரைகளைக் கேட்டு) அவன் கூறியன யாவும் உறுதி பயப்பனவே என; உணர்ந்த ஊழியான் - உணர்ந்த ஊழிக்காலத்தையும் வெல்ல வல்ல இராமன்; இம்மாரிக்கு இறுதி உண்டே கொல் - 'இம்மழைக் காலத்திற்கு ஒரு முடிவும் உள்ளதோ?' என்பது ஓர் தெறுதுயர் - என்று எண்ணியதாலாகிய ஒப்பற்ற கொடிய துன்பத்தால்; உழந்தனன் தேய - வருந்தி, மெலிந்து நிற்க; அப்பருவம் - அந்தக் கூதிர்காலம்; ஆண்டு போய் - தன் ஆட்சியைச் செய்துவிட்டு; தேய்வு சென்று - சிறிது சிறிதாகத் தன் வலிமை தேய்ந்து; அறுதியை அடைந்தது - முடிவடைந்தது.

ஊழிக்காலத்தும் அழியாத கடவுளான இராமபிரான் காலத்திற்கு வசப்பட்டு வருந்தியது, தான் கொண்ட மனித உருவிற்கேற்ப பாவனையே என்பது விளங்க 'ஊழியான்' என்றார். தனக்கு இளையவன் தானே எனக் கருதாது இலக்குவன் கருத்தை ஏற்றுக்கொண்டதை 'உறுதி அஃதே என உணர்ந்த ஊழியான்' என்றார். இராமன் தேய அப்பருவமும் உழந்தவன்மீது கொண்ட பரிவால் தேய்வு சென்று அறுதி அடைந்தது என்ற நயம் காண்க. கூதிர்ப்பருவம் தேய்வு செல்லுதலாவது மழை நாளாக நாளாகக் குறைந்து வருதல்; அறுதி அடைதலாவது மழை இல்லாமல் போவதாகும். முன் பாடலில் 'பைந்தொடிக் கடர்களை பருவம் வந்து அடுத்துளது' எனக் கூறியதற்கேற்ப சிலநாட்களில் மழைக்காலம் முடிவுற்றது என்று இங்குக் கூறினார்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Knowing 'that is sound counsel', the Lord who outlasts the ages,
  2. in one burning grief, 'Is there any end to this rain?',
  3. suffered and wasted away; and waning, waning,
  4. that season, having held its sway there, came to its end.

What the poem says

Irāmaṉ accepts his younger brother's advice. He is called 'the one of the ages', the god who survives even the end of the world; his suffering under the season is part of the human role he has taken on.

Still he keeps asking whether the rains will ever end, and he grows thin with grief. The poet suggests that the season, as if pitying him, wasted away too: day by day the rain lessened, until the monsoon had run its course and ended.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1uṟuti aḵtē eṉa uṇarnta ūḻiyāṉ
'iṟuti uṇṭēkol im mārikku?' eṉpatu ōr
teṟu tuyar uḻantaṉaṉ tēyat tēyvu ceṉṟu
aṟutiyai aṭaintatu ap paruvam āṇṭu pōy.