கம்பராமாயணம் 4346 · கிட்கிந்தா 9.109

Section கிட்கிந்தா காண்டம் / 9. கார்காலப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1கடம் திறந்து எழுகளிறுஅனைய கார்முகில்
இடம் திறந்து ஏகலின்பொலிந்தது இந்துவும்;
நடம் திறன் நவில்வுறுநங்கைமார் முகம்
படம் திறந்து ஒருவலின்பொலியும் பான்மைபோல்.

பொருள் · Meaning in Tamil

கடம் திறந்து எழுகளிறு அனைய - கன்னங்கள், கபாலங்கள் வழி (மதநீர் சொரிந்து கொண்டு) செல்கின்ற ஆண்யானைகளை ஒத்திருந்த; கார் முகில் - கரிய மேகங்கள்; இடம் திறந்து ஏகலின் - (தாம் கவிந்து கொண்டிருந்த) விண்ணிடத்தை (வெளியாகும்படி) விட்டுச் சென்றமையால்; இந்துவும் - (கார்மேகங்களால் மறைக்கப்பட்டிருந்த) சந்திரனும்; படம் திறந்து உருவலின் - (மறைக்கும்பொருட்டு இடப்பட்ட) திரைச்சீலையை உருவித் திறந்துவிட்டதால்; நடம் திறன் நவில்வுறு - நடனத்தைத் திறம்படச் செய்யும்; நங்கைமார் முகம் - நடன மங்கையரின் முகம்; பொலியும் பான்மைபோல் - விளங்கும் தன்மை போல; பொலிந்தது - விளங்கித் தோன்றிற்று.

மழை பொழிந்துவிட்டுச் செல்லும் மேகத்திற்கு மதம் சொரிந்துவிட்டுச் செல்லும் களிறு உவமை. கரிய பெரிய வடிவமும், விரைந்த கதியும், முழக்கமும், மழை பொழிதலும் பற்றி 'கடம் திறந்து எழு களிறு அனைய கார்முகில்' என்றார். மேகங்களின் மறைப்பு நீங்கச் சந்திரன் விளக்கமுறத் தோன்றியமைக்கு, அரங்கில் திரைச்சீலை விலகப் புலனாகும் நடன மங்கையர் முகம் உவமையாயிற்று. படம் - திரைச்சீலை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As the dark clouds, like bull elephants surging on with their temples streaming musth,
  2. opened the sky and moved away, the moon too shone out,
  3. as the faces of women skilled in the art of dance
  4. shine forth when the curtain is drawn aside.

What the poem says

The departing rain-clouds are like bull elephants in rut, streaming musth from their temples: huge, dark, fast-moving and roaring, and pouring out liquid as they go.

As they move off, the moon that they had hidden appears, like the face of a dancer revealed on stage when the curtain is pulled aside.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kaṭam tiṟantu eḻu kaḷiṟu aṉaiya kār mukil
iṭam tiṟantu ēkaliṉ polintatu intuvum;
naṭam tiṟaṉ navilvuṟu naṅkaimār mukam
paṭam tiṟantu uruvaliṉ poliyum pāṉmaipōl.