கம்பராமாயணம் 4352 · கிட்கிந்தா 9.115

Section கிட்கிந்தா காண்டம் / 9. கார்காலப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

கல்வியின் திகழ் - கல்வியால் விளக்கம் பெற்றுள்ள; கணக்காயர் - பள்ளி ஆசிரியர்; கம்பலை - (பயில்விக்க) ஆரவாரத்தோடு; பல் விதச் சிறார் என - (கல்விகற்கின்ற) பலவகைப்பட்ட சிறுவர்கள் போல; பகர்வ - (மழைக்காலத்தில்) கத்திக் கொண்டிருந்த; பல் அரி எலாம் - பல்வகைப்பட்ட தவளைகள் எல்லாம்; செல் இடத்து அல்லது - (தம்முடைய சொற்கள்) பலிக்கும் இடத்திலன்றி; ஒன்று உரைத்தல் செய்கலா - (பிற இடங்களில்) ஒரு சொல்லையும் சொல்லுதல் செய்யாத; நல் அறிவாளரின் - நல்ல அறிவுடையவர்கள் போல; நா அவிந்த - நா அடங்கின.

மழைக் காலத்தில் தவளைகள் மிகுதியாகக் கத்துதலும் மழை நீங்கிய காலத்தில் குரல் ஒடுங்கலும் இயல்பாகும். மழைக் காலத்தில் தவளைகள் எழுப்பும் பேரொலிக்குப் பள்ளியில் ஆசிரியர் பாடம் சொல்ல உடன் சொல்லும் சிறுவர்களின் பேரொலியும், அத்தவளைகள் மழை நீங்கிய காலத்தில் ஓரோர் சமயம் ஒலி எழுப்பிப் பிற சமயங்களில் அடங்கியிருந்த நிலைக்கு, செல்லும் இடங்களில் பேசிப் பிற சமயங்களில் பேசாதிருக்கும் அறிஞர் நிலையும் உவமையாயின. ஆரவாரத்திற்குப் பள்ளிச் சிறுவரையும், நாவடக்கத்திற்கு அறிஞர்களையும் உவமை கூறிய நயம் காண்க. கணக்காயர் எண்ணும் எழுத்தும் ஆகிய நெடுங்கணக்கை ஆராய்பவர்.

இச்செய்யுட் கருத்து வான்மீகத்தும், துளசீதாசர் இராமாயணத்திலும் காணப்படும்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Like the many kinds of children clamouring before teachers bright with learning,
  2. the many frogs that had kept up their croaking,
  3. like wise men who will not say a single word
  4. except where it will bear fruit, all fell silent.

What the poem says

In the rains the frogs croaked loudly together, like a crowd of schoolchildren chanting their lessons after the teacher. Now that the rains are over they are mostly quiet, croaking only now and then.

The poet compares them to wise people who speak only where their words will be heeded and stay silent otherwise. The same image of frogs as reciting pupils is found in Vālmīki's Rāmāyaṇa and in Tulsīdās.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kalviyiṉ tikaḻ kaṇakkāyar kampalaip
pal vitac ciṟār eṉap pakarva pal ari
cel iṭattu allatu oṉṟu uraittal ceykalā
nal aṟivāḷariṉ avinta nā elām.