கம்பராமாயணம் 4351 · கிட்கிந்தா 9.114
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
தாள்தொறு மலர்ந்தன - நாளங்கள் தோறும் மலர்ந்தனவாய்; முதிர்ந்த தாமரை - முதிர்ச்சி பெற்ற தாமரை மலர்கள்; ஊடிய மடந்தையர் - (தலைவரோடு) ஊடல்கொண்ட மகளிரின்; வதனம் ஒத்தன - முகத்தைப் போன்ற. (ஒரு புறமாக முகத்தைத் திருப்பிக் கொண்டன என்றபடி); சேடு உறு நறுமுகை - அழகு பொருந்திய நறுமணம் மிக்க அரும்புகள்; விரிந்த செங்கிடை - மலரப்பெற்ற செங்கிடை மலர்கள்; கூடினர் துவர் இதழ் - தலைவரொடு சேர்ந்து மகிழும் மகளிரின் சிவந்த இதழ்கள்போல; கோலம் கொண்டன - அழகுடன் விளங்கின.
தலைவர்மீது ஊடல் கொள்ளும் மகளிர் சினக்குறியாக முகத்தைத் திருப்பிக் கொள்ளல் இயல்பு. அத்தகு மகளிர் முகம், சில நாட்களுக்கு முன்னர் மலர்ந்து பின்பு முதிர்ந்து ஒரு புறம் சாய்ந்து விடும் தாமரை மலர்க்கு உவமை ஆயிற்று. பனிக்காலத்தில் தாமரை பொலிவிழத்தலைத் "தாமரை முகங்கள் வாட்டும் தண்பனிக் காலந்தன்னில்" (நைடதம். அன்னத்தைக் கண்ணுற்ற - 9) என்றதாலும் அறியலாம். செங்கிடை - நீரில் தோன்றும் சிவப்பு நெட்டி. தலைவரொடு கூடிய மகளிர் வாயிதழ் சிவந்திருப்பது போலச் செங்கிடை மலர்கள் செந்நிறமுடையனவாய் மலர்ந்திருந்தன. இருவகை மலர்க்கும் உவமையாக, ஊடிய மகளிர் வதனத்தையும், கூடிய மகளிர் துவர் இதழையும் கூறிய நயம் காண்க. செங்கிடை - ஆகுபெயராய் மலரை உணர்த்திற்று.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Like the faces of women sulking with their lovers
- were the over-ripe lotuses that had bloomed on every stalk;
- the red sola plants, their lovely fragrant buds now opened,
- took on the look of the coral lips of women united with their lovers.
What the poem says
The cold season changes the water flowers. The lotuses, past their prime, droop to one side on their stalks, like the faces of women who turn away in a lovers' quarrel. Lotuses were said to lose their beauty in the dewy season.
The red sola, a pith plant that grows in water, opens bright red blooms like the lips of women happily reunited with their lovers. The verse sets the two moods of love side by side: the sulk and the reunion.