கம்பராமாயணம் 4350 · கிட்கிந்தா 9.113

Section கிட்கிந்தா காண்டம் / 9. கார்காலப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1வஞ்சனைத் தீவினை மறந்த மாதவர்
நெஞ்சு எனத் தெளிந்தன நீரம் நீர்தொறும்
'பஞ்சு'எனச் சிவக்கும் மென் பாதப் பேதையர்
அஞ்சனக் கண் எனப் பிறழ்ந்த ஆடல் மீன்.

பொருள் · Meaning in Tamil

வஞ்சனை தீவினை - தீவினைக்கு இடமான வஞ்சனையை; மறந்த மாதவர் - அறவே நீக்கிய பெருந்தவ முனிவரின்; நெஞ்சு என - மனம் போல; தெளிந்த நீர் - தெளிந்த நீர்; நிரந்து தோன்றுவ - (கலக்கமின்றிப்) பரந்து காணப்படும்; ஆடல் மீன் - (அந்நீரில்) விளையாடும் மீன்கள்; பஞ்சு எனச் சிவக்கும் - செம்பஞ்சுக் குழம்பு போலச் சிவந்து நிற்கும்; மென்பாதப் பேதையர் - மென்மையான பாதங்களை உடைய மகளிரின்; அஞ்சனக் கண் என - மைதீட்டிய கண்கள் பிறழ்வது போல; பிறழ்ந்த - பிறழ்ந்தன.

முனிவர்கள் தவம் அன்றிப் பிறவற்றை அறியாராதலின் 'தீவினை மறந்த மாதவர்' என்றார். மனம் கலங்குதற்குக் காரணமான தீவினை நீங்கியதாலும், மனம் தெளிவு பெறுதற்குக் காரணமான கல்வி, கேள்விகளால் தெளிந்த ஞானம் பெற்றமையாலும் அவர்கள் நெஞ்சு தெளிவுடைய நெஞ்சமாயிற்று. மழை நீங்கிய பின்னர் நீர்நிலைகள் தெளிவடைந்த நிலைக்கு மாதவர் மனம் உவமை கூறப்பட்டது. 'தங்கள் நாயகரின் தெய்வம்தான் பிறிது இலை' என்று எண்ணும் மங்கைமார் சிந்தை போலத் தூயது' (408) என்றமை ஈண்டு ஒப்பு நோக்கத்தக்கது.

தெளிந்த நீரில் மீன்கள் பிறழ்தலுக்கு மகளிர் கண்கள் பிறழ்தல் உவமை. எதிர்நிலை உவமை அணி.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Like the minds of great ascetics who have forgotten deceit and evil deeds,
  2. clear water lay spread out everywhere;
  3. like the kohl-darkened eyes of innocent girls whose soft feet glow red as with lac,
  4. the playful fish darted and flashed.

What the poem says

After the rains the pools settle and become clear. The poet compares them to the minds of great ascetics, free of deceit and evil, made clear by learning and wisdom.

In that clear water the fish dart about like the restless, kohl-lined eyes of young women whose feet are reddened with lac. Comparing eyes to darting fish is common in Tamil poetry; here it is turned around, and the fish are compared to eyes.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1vañcaṉait tīviṉai maṟanta mā tavar
neñcu eṉat teḷinta nīr nirantu tōṉṟuva;
'pañcu' eṉac civakkum meṉ pātap pētaiyar
añcaṉak kaṇ eṉap piṟaḻnta āṭal mīṉ.