கம்பராமாயணம் 4349 · கிட்கிந்தா 9.112

Section கிட்கிந்தா காண்டம் / 9. கார்காலப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1தம் சிறை ஒடுக்கின தழுவும் இன்னல
நெஞ்சு உறு மம்மரும் நினைப்பும் நீண்டன
மஞ்சு உறு நெடு மழை பிரிந்த மாமயில்
எஞ்சின மிதிலை நாட்டு அன்னம் என்னவே.

பொருள் · Meaning in Tamil

மஞ்சு உறு நெடுமழை - மேகங்கள் பொருந்திய பெரிய மழைக் காலம், பிரிதலால் - அகன்றுவிட்டதால்; மயில் - மயில்கள்; தம் சிறை ஒடுங்கின - தம் சிறகுகளை ஒடுக்கிக் கொண்டனவாய்; தழுவும் இன்னல - பொருந்திய துன்பத்தை உடையனவாய், நெஞ்சு உறு மம்மரும் - உள்ளத்தில் கொண்ட மயக்கமும்; நினைப்பும் நீண்டன - நினைவும் மிக்கனவாய்; மிதிலை நாட்டு - மிதிலை நாட்டில் பிறந்த; அன்னம் என்னவே - சீதையைப் போல; அஞ்சின - அஞ்சின.

இராமனைப் பிரிந்த சீதை தன் உடம்பை ஒடுக்கிக் கொண்டு, இன்னல் நிறைந்தவளாய், மனத்தில் மயக்கமும் நினைவுகளுமாய் வருந்தியிருத்தல் போல மயில்களும் மழைக்காலம் பிரிதலால் சிறகுகளை ஒடுக்கிக் கொண்டு, துன்பம் கொண்டனவாய் நினைவும், மயக்கமும் மிக்கனவாய் அஞ்சி ஒடுங்கின என்பதாம். உவமை அணி. நினைப்பு - மழைக்காலத்தில் தாம் எய்திய இன்பங்களை நினைத்துப் பார்த்தால். கார்காலம் தொடங்கிய பொழுது 'ஆடின மயில்கள்' (4173) என்றதை நினைவு கொள்ளலாம். கார்காலத்தில் மகிழ்ந்தாடிய மயில்கள், மழை நீங்கியவுடன் துன்புற்று ஒடுங்கும் இயல்பு கூறப்பட்டது. அன்னம் - உவமை ஆகுபெயராய்ச்

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Their wings folded in, full of clinging sorrow,
  2. the bewilderment in their hearts and their brooding grown long,
  3. because the long, cloud-laden rains had parted from them, the peacocks
  4. shrank in fear, like the swan of the land of Mithilai.

What the poem says

Peacocks dance with joy in the rains. Now that the monsoon has gone, they fold their wings and huddle, dazed and remembering their happiness.

The poet compares them to Cītai, the 'swan of Mithilai', her birthplace: separated from Irāmaṉ, she too shrinks into herself in Ilaṅkai, afraid and lost in memories. The peacocks have lost the rain as she has lost her husband.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1tam ciṟai oṭuṅkiṉa taḻuvum iṉṉala
neñcu uṟu mammarum niṉaippum nīṇṭaṉa
mañcu uṟu neṭu maḻai piritalāl mayil
añciṉa mitilai nāṭṭu aṉṉam eṉṉavē.