கம்பராமாயணம் 4348 · கிட்கிந்தா 9.111

Section கிட்கிந்தா காண்டம் / 9. கார்காலப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1மன்னவன் தலைமகன் வருத்தம் மாற்றுவான்
நன்னெடும் பருவமும் நணுகிற்று ஆதலால்
"பொன்னினை நாடிய போதும் என்ப போல்
அன்னமும் திசைதிசை அகன்ற விண்ணின் வாய்."

பொருள் · Meaning in Tamil

மன்னவன் தலைமகன் - தசரத சக்கரவர்த்தியின் முதல் மகனாகிய இராமபிரானின்; வருத்தம் மாற்றுவான் - துன்பத்தை மாற்றுவதற்குரிய; அந்நெறிப் பருவமும் - அந்த நெறிப்பட்ட முன்பனிக் காலமும்; நணுகிற்று - வந்துவிட்டது; ஆதலால் - ஆகையினாலே; பொன்னினை நாடிய போதும் - பிராட்டியைத் தேடிச் செல்வோம் (யாம்); என்ப போல் - என்று சொல்லிப் புறப்பட்டன போல; அன்னமும் - அன்னப்பறவைகளும், விண்ணின் வாய் - வானத்தில்; திசை திசை அகன்ற - திசைகள் தோறும் பறந்து சென்றன.

மழைக் காலத்தில் குளிர் தாங்காது அன்னப் பறவைகள் ஒடுங்கிக் கிடக்கும். 'தாமரை மலர்த் தவிசு இகந்து தகை அன்னம், மாமரம் நிரைத்தொகு பொதும்பர் உழை வைக' (4228) என அவை நீர்நிலைகளை விடுத்துப் பொதும்பரில் தங்கியமை முன்னர்க் கூறப்பட்டது. மழை நீங்கிய அளவில் அவை விண்ணில் பறந்து தாம் விரும்பிய திசைகளுக்குச் சென்றன. இயல்பாக நிகழும் இச்செயலைச் சீதையைத் தேடுவதற்காகப் புறப்பட்டன என்று கூறியது தற்குறிப்பேற்ற அணி. வானர வீரர்களுக்கு முன்னாகப் பறவைகளும் சீதையைத் தேடிப் புறப்பட்டன என்பது உணர்த்த 'அன்னமும்' என்று உம்மை கொடுத்தார். எல்லா உயிர்களும் இராமபிரான் இன்ப துன்பங்களில் பங்கு கொள்வதாகக் கூறும் கவிநயம் காண்க. வருத்தம் - சீதையின் பிரிவால் ஏற்பட்ட துன்பம். பொன் - செல்வத்திற்கு உரிய கடவுளாகிய திருமகளின் அவதாரமான சீதை. அன்னமும் - உம்மை எதிரது தழுவிய எச்சப்

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Since the fitting season that would end the sorrow
  2. of the king's eldest son had drawn near,
  3. as if saying "We go out to seek the golden one",
  4. the swans too flew off to every quarter across the sky.

What the poem says

During the cold rains the swans had left the lotus pools and huddled in the groves. Now that the rains are over they take to the sky and fly off in all directions.

The poet gives this natural movement an imagined purpose: the swans set out, ahead even of the monkey heroes, to search for Cītai, the 'golden one', an incarnation of Tirumakaḷ, goddess of fortune. All creatures seem to share in Irāmaṉ's joys and sorrows.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1maṉṉavaṉ talaimakaṉ varuttam māṟṟuvāṉ
an neṟip paruvamum naṇukiṟṟu ātalāl
"poṉṉiṉai nāṭiya pōtum" eṉpapōl
aṉṉamum ticai ticai akaṉṟa viṇṇiṉvāy.