கம்பராமாயணம் 4392 · கிட்கிந்தா 10.34
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
கடை சிக்குற - (இவ்வாறு) நகர வாயிலை உறுதியாக; சேமித்த செய்கைய - பத்திரப்படுத்திக் கொண்ட செய்கையுடைய வானரங்கள்; புக்கு உறுக்கி - (இவ் வாயிலைக் கடந்து இலக்குவன் வந்தால்) எதிரே சென்று (அவனை அச்சுறுத்தி (அதட்டி); புடைத்தும் என - நையப் புடைப்போம் என்று எண்ணி; தொக்குறுத்த மரத்த - (முறித்துக் கையில்) எடுத்துக் கொண்ட மரங்களையுடையனவும்; வெற்பும் இறுத்தன - பெரிய பாறைகளையும் பேர்த்து எடுத்துக் கொண்டனவுமாம்; துவன்றின - (இரண்டு) நெருங்க; புறம் மிக்கு இறுத்தன - மதில் பக்கத்தில் கூட்டமாகக் கூடி நின்றன.
சேமித்தல் - காவல் செய்து வைத்தல். ய்து ல்கள் தொகுத்தல், ஈட்டுதல். இறுத்தல் - தங்குதல்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Having made the gate fast and secure,
- holding the trees they had gathered, they crowded together;
- 'We will go out, frighten him and beat him,' they said, and outside
- they massed in force; they wrenched up hills as well.
What the poem says
Having barricaded the gate, the monkeys arm themselves with uprooted trees and boulders and crowd along the wall. They boast that if Ilakkuvaṉ forces his way in they will go out, scare him off and give him a thrashing. Their bravado sets up the next verses, in which Ilakkuvaṉ simply pushes the gate down.