கம்பராமாயணம் 4399 · கிட்கிந்தா 10.41

Section கிட்கிந்தா காண்டம் / 10. கிட்கிந்தைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1அன்ன காலையின் ஆண் தகை ஆளியும்
பொன்னின் நல்நகர் வீதியிற் புக்கனன்;
சொன்ன தாரையைச் சுற்றினர் நின்றவர்
"என்ன செய்குவது? எய்தினன் " என்றனர்.

பொருள் · Meaning in Tamil

அன்ன காலையில் - அச் சமயத்தில், ஆண் தகை ஆளியும் - ஆடவருள் சிங்கம் போன்றவனாகிய இலக்குவன்; பொன்னின் நன்னகர் - அழகும் சிறப்பும் மிக்க அந் நகரத்து; வீதியில் புக்கனன் - வீதியில் புகலானான்; சொன்ன தாரையை - (அதைக் கண்டு அஞ்சி) முன்னர்க் கடிந்து பேசிய தாரையை; சுற்றினர் நின்றவர் - சுற்றி நின்றவர்களான அங்கதன் முதலியோர்; எய்தினன் - (அத்தாரையை நோக்கி) (இலக்குவன் வந்துவிட்டானே; என்ன செய்குவது - நாம் என்ன செய்வது; என்றனர் - என்று கேட்டார்கள்.

ஆண்தகை ஆழியான் எனப்பாடம் கொண்டு பின்வருமாறு நயம் காண்பாரும் உளர். தான் இருந்த இடத்திலேயிருந்து தனது நிலம் முழுவதும் தன் கட்டளையால் நடக்கச் செய்யும் ஆற்றல் மிக்க அரசனைப் போல வல்லமை நிறைந்த இராமன் இலக்குவன் மூலமாகத் தன் கட்டளையை நிறைவேற்றுகின்றான். ஆதலால் இராமனை 'ஆண்டகை' என்றும், இலக்குவனை அவனது 'ஆழியான்' என்றும் கூறுதல் பொருந்தும் என்பர்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. At that moment the lion among men
  2. entered the streets of the fine golden city;
  3. those standing round Tārai, who had spoken her rebuke,
  4. said, 'What shall we do? He has come.'

What the poem says

Ilakkuvaṉ, a lion among men, walks into the streets of the city. Aṅkataṉ and the others, still gathered around Tārai who had just scolded them, turn to her in alarm and ask what they should do now.

Some editions read āḻiyāṉ, 'the wheel', instead of āḷi, 'lion'. On that reading Ilakkuvaṉ is the wheel of Irāmaṉ's command, carrying out his brother's will as a king's order travels everywhere.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1aṉṉa kālaiyil āṇ takai āḷiyum
poṉṉiṉ nal nakar vītiyil pukkaṉaṉ;
coṉṉa tāraiyaic cuṟṟiṉar niṉṟavar
"eṉṉa ceykuvatu? eytiṉaṉ" eṉṟaṉar.