கம்பராமாயணம் 4398 · கிட்கிந்தா 10.40

Section கிட்கிந்தா காண்டம் / 10. கிட்கிந்தைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1வானரங்கள் வெருவி மலை ஒரீஇ
கான் ஒருங்கு படர அக் கார்வரை
மீன் நெருங்கிய வானகம் மீன் எலாம்
போனபின் பொலிவு அற்றது போன்றதே.

பொருள் · Meaning in Tamil

வானரங்கள் வெருவி - குரங்குகள் இவ்வாறு அஞ்சி; மலை ஒரீஇ - அந்தக் கிட்கிந்தை மலையை விட்டு நீங்கி; கான் ஒருங்கு படர - காடுகளில் ஒன்றாகச் சென்று சேர்ந்துவிட்டதால்; அக் கார் வரை - மேகங்கள் சூழ்ந்த அந்தக் கிட்கிந்தை மலையானது; மீன் நெருங்கிய வானகம் - நட்சத்திரங்கள் நிறைந்த வானம்; மீன் எலாம் போனபின் - அந் நட்சத்திரங்கள் எல்லாம் நீங்கிய பின்பு; பொலிவு அற்றது - பொலிவு இழந்த தன்மையை; போன்றது - ஒத்திருந்தது.

கார் வரை - பெரிய மலை என்றும் பொருள் உரைக்கலாம். கிட்கிந்தை மலை நட்சத்திரங்கள் நீங்கப் பெற்ற வானத்தைப் போலப் பொலிவற்றிருந்தது. உவமையணி.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As the monkeys in terror left the mountain
  2. and went off together into the forest, that cloud-capped mountain
  3. was like the sky crowded with stars
  4. once all the stars are gone and its splendour has left it.

What the poem says

The frightened monkeys abandon the mountain and flee together into the forest. Emptied of them, Kiṭkintai's height looks as dull as a night sky after all the stars have faded. The crowd of monkeys had been its stars.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1vāṉaraṅkaḷ veruvi malai orīi
kāṉ oruṅku paṭara ak kār varai
mī neruṅkiya vāṉakam mīṉ elām
pōṉa piṉ polivu aṟṟatu pōṉṟatē.