கம்பராமாயணம் 4406 · கிட்கிந்தா 10.48
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
மைந்தன் - இலக்குவன்; தாமரை வதனம் சாய்த்து - தாமரை போன்ற தனது முகத்தைச் சாய்த்துக் கொண்டு; நெடுந் தனு தரையின் - கையில் தாங்கிய நெடிய வில்லை நிலத்திலே; ஊன்றி - ஊன்ற வைத்து; மாமியர் குழுவின் - மாமியர் கூட்டத்தின் நடுவே; வந்தான் ஆம் என - வந்த மருமகனைப் போல, நிற்ப - (கூச்சத்தோடு) நிற்க; பொன் தோள் - அழகிய தோள்களையும்; தூ மனம் - தூய்மையான மணத்தையும், நெடுங்கண் தாரை - நீண்ட கண்களையுமுடைய தாரை; பூமியில் அணங்கு அனார்தம் - நிலவுலகிற்கு வந்த தேவமகளிர் போன்ற வானரப் பெண்களின்; பொதுவிடைப் புகுந்து - கூட்டத்திடையே புகுந்துசென்று; நடுங்குவாள் இனைய சொன்னாள் - நடுங்கிக் கொண்டு இந்தச் சொற்களைச் சொல்லத் தொடங்கினாள்.
அன்னியன் எதிரில் வந்து நிற்பதற்குக் கூச்சப்பட்டு மாதர் கூட்டத்திடையே ஒதுங்கி நிற்பவளும், இலக்குவனோடு பேசுவதற்குக் கூசி உள்ளமும் உடலும் நடுங்குபவளுமான தாரையின் குணநலம் உணர்த்தப் பெற்றது. நடுங்குவாள்: முற்றெச்சம்; வினையாலணையும் பெயராக்கியும் பொருள் உரைக்கலாம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- His lotus face bent down, his long bow planted on the ground,
- the young man stood like a son-in-law who has come among his mothers-in-law;
- then, coming into the midst of those women like goddesses on earth, she of the golden shoulders,
- of pure fragrance and long eyes, Tārai, trembling, spoke these words.
What the poem says
Ilakkuvaṉ stands with his head lowered and his bow resting on the ground, as shy as a young son-in-law surrounded by his wife's female relatives.
Tārai, modest herself, speaks from among her companions rather than stepping out alone in front of a strange man, and she trembles as she speaks. The poet shows the propriety and restraint of both.