கம்பராமாயணம் 4405 · கிட்கிந்தா 10.47

Section கிட்கிந்தா காண்டம் / 10. கிட்கிந்தைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1ஆர்க்கும் நூபுரங்கள் பேரி, அல்குலாம் தடம் தேர் சுற்ற,
வேல் கண், வில் புருவம் போர்ப்ப, மடந்தையர் மிடைந்த போது,
பேர்க்க அருஞ்சீற்றம் பேர, முகம் பெயர்த்து ஒதுங்கி, பின்னர்ப்
பார்க்கவும் அஞ்சினான், அப் பருவரை அனைய தோளான்.

பொருள் · Meaning in Tamil

ஆர்க்கும் நூபுரம் பேரி - ஆரவாரிக்கின்ற காற் சிலம்புகள் பல வகைப் பேரிகைகளாக முழங்க; அல்குல் ஆம் தடந்தேர் - அல்குலாகிய பெரிய தேர்; சுற்ற - கவிந்து கொள்ள; வேற்கண் - கண்கள் வேற் படைகளாகவும், வெம் புருவப் போர்வில் - கொடிய புருவங்கள் போர் செய்யும் விற்படைகளாகவும் (அமைய); மெல்லியர் வளைந்த போது - மகளிரது சேனை சூழ்ந்துகொண்ட பொழுது; அப் பனையினும் உயர்ந்த தோளான் - பனையை விட நெடிய தோள்களையுடைய அந்த இலக்குவன்; பேர்க்க அரும் - (யாராலும்) மாற்றமுடியாத, சீற்றம் பேர - கோபம் தணிய; முகம் பெயர்ந்து - முகத்தை ஒரு புறமாகத் திருப்பிக் கொண்டு; ஒதுங்கிற்று அல்லால் - ஒதுங்கி நின்றதேயல்லாமல்; பார்க்கவும் அஞ்சினான் - (அப் பெண்களைக்) கண்ணால் பார்ப்பதற்கும் அச்சமுற்றான்.

மகளிர் நேர்பட்ட மாத்திரத்தில் இலக்குவனது முகம் சினம் நீங்கி இயல்பாக ஆனமை தோன்ற 'முகம் பெயர்ந்து' எனத் தன்வினையால் கூறினார். முதல் இரண்டடிகள் - உருவக அணி.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. With ringing anklets for war drums, with broad hips for great chariots closing round,
  2. with spear-eyes and bow-brows ranged for battle, when the gentle women hemmed him in,
  3. his immovable rage left him; he only turned his face aside and drew back,
  4. and feared even to look at them, he whose arms were mightier than palmyra trunks.

What the poem says

The metre changes here to a longer, six-foot line. The women's army closes in: anklets for drums, hips for chariots, eyes for spears, brows for bows.

Ilakkuvaṉ, who could not be stopped by walls or gates, is stopped by this. His fury drains away; he turns his face aside and dares not even look at the women. His shoulders are 'greater than palmyra trees', yet modesty and respect for women defeat him where force could not.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1ārkkum nūpuraṅkaḷ pēri, alkul ām taṭan tēr cuṟṟa,
vēṟ kaṇ, vil puruvam pōrppa, melliyar vaḷaintapōtu,
pērkka aruñ cīṟṟam pēra, mukam peyarntu otuṅkiṟṟu allāl,
pārkkavum añciṉāṉ, ap paṉaiyiṉum periya tōḷaṉ.