கம்பராமாயணம் 4404 · கிட்கிந்தா 10.46

Section கிட்கிந்தா காண்டம் / 10. கிட்கிந்தைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1வில்லும் வாளும் அணிதொறும் மின்னிட
மெல் அரிக்குரல் மேகலை ஆர்த்து எழ
பல்வகைப் புருவக் கொடி பம்பிட
வல்லி ஆயம் வலத்தினின் வந்ததே.

பொருள் · Meaning in Tamil

அணிதொறும் - அணிந்துள்ள அணிகலன்கள் தோறும்; வில்லும் வாளும் மின்னிட - வில்லும் வாளும் ஒளிவிடவும்; மெல் அரிக் குரல் - மெல்லிய பரல்களையுடைய காற்சிலம்புகளின் ஒலியும்; மேகலை ஆர்த்து எழ - இடையணியான மேகலை (பறையொலிபோல) ஆரவாரித்து எழவும்; பல்வகைப் புருவக் கொடி - பலவகைப்பட்ட புருவங்களாகிய கொடிகள்; பம்பிட - நிறைந்திருக்கவும், வல்லி ஆயம் - மகளிர் கூட்டமாகிய சேனை; வலத்தினில் வந்தது - வலிமையோடு (இலக்குவனை வளைத்துக் கொண்டது.

மகளிர் கூட்டம் இலக்குவனைச் சூழ்ந்து வழிமறித்ததை, ஒரு சேனை வந்து சூழ்ந்ததாக வருணித்தார். மகளிர் இடம் பெயர்ந்து செல்லும்போது அவர்களின் சிலம்பும் மேகலையுமாகிய அணிகள் ஒலிப்பதைப் போர்ப் பறைகளின் ஒலியாக உவமித்தார். அரி: சிலம்பின் உட்பரல். புருவக் கொடி - கொடி போன்ற புருவம். கொடி - புருவக்கொடியையும், போர்க் கொடியையும் குறித்தது. கொடி: படர்கொடியும் துவசமும். சிலேடையை அங்கமாகக் கொண்ட உருவக அணி. மெல்லரி - பண்புத் தொகையன்மொழி (சிலம்பு) வல்லி - (பெண்) உவமையாகுபெயர்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. With bows and swords flashing from every ornament,
  2. with the soft-pebbled anklets' jingle and the girdles ringing out,
  3. with banners of every kind of eyebrow thronging,
  4. the army of creeper-slender women came on in force.

What the poem says

The women surrounding Ilakkuvaṉ are described as an army. Their jewels flash like bows and swords, their anklets and girdles ring like war drums, and their arched eyebrows are the army's banners.

The verse depends on double meanings: koṭi means both a creeper or slender line, as of a brow, and a battle flag. The 'creeper' women are pictured as a force advancing to surround him.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1villum vāḷum aṇitoṟum miṉṉiṭa
mel arik kural mēkalai ārttu eḻa
pal vakaip puruvak koṭi pampiṭa
valli āyam valattiṉil vantatē.