கம்பராமாயணம் 4410 · கிட்கிந்தா 10.52

Section கிட்கிந்தா காண்டம் / 10. கிட்கிந்தைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1மங்கல அணியை நீக்கி, மணி அணி துறந்து வாசக்
கொங்கு அலர் கோதை மாற்றி, குங்குமம் சாந்தம் கொட்டாப்
பொங்குவெம் முலைகள், பூகக் கழுத்தொடு மறையப் போர்த்த
நங்கையைக் கண்ட வள்ளல், நயனங்கள் பனிப்ப நின்றான்.

பொருள் · Meaning in Tamil

மங்கல அணியை நீக்கி - தாலியை அணியாமல் விடுத்து; மணி அணி துறந்து - இரத்தின மணிகள் போன்ற மற்றைய அணிகலன்களையும் நீக்கிவிட்டு; வாசக் கொங்கு அலர் - மணமிக்க தேன் பெருகுகின்ற மலர்களின்; கோதை மாற்றி - மாலை சூடுவதையும் விட்டு; குங்குமம் சாந்தம் கொட்டா - குங்குமப் பூவின் குழம்பையும், சந்தனக் கலவையையும் பூசாத; பொங்கு வெம் முலைகள் - பருத்துள்ள வெம்மையான முலைகள்; பூகக் கழுத்தோடு மறையப் போர்த்த - பாக்குமரம் போன்ற கழுத்துடன் மறையும்படி (மேலாடையால்) நன்றாகப் போர்த்துள்ள; நங்கையைக் கண்ட வள்ளல் - அத் தாரையைப் பார்த்த அருள்வள்ளலான இலக்குவன்; நயனங்கள் பனிப்ப - (தாரையின் தோற்றம் கண்டதாலும், தன் தாயரை நினைந்ததாலும்) தன் கண்களில் நீர்துளிக்க; நைந்தான் - வருந்தினான்.

தாரையின் கைம்மைக் கோலம் இங்கு விளக்கப் பெறுகின்றது. இலக்குவன் கண்ணீர் மல்கி நைந்துருகுவதற்குக் காரணம் தன்னுடைய தாயரும் இப்படித்தானே கைம்மைக் கோலம் பூண்டிருப்பர் என்ற நினைவினால். மங்கலவணி - 'தாலி'; 'ஈகையரிய இழையணி மகளிர்' - புறம். 127

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. She had put away the auspicious marriage emblem, given up her jewels,
  2. set aside garlands of fragrant, honey-filled flowers; her full, warm breasts,
  3. bare of saffron and sandal paste, were covered right up to her slender, areca-like neck;
  4. seeing that lady, the generous prince wept and was grieved.

What the poem says

The verse describes Tārai in the dress of a widow. She has removed her tāli, the marriage emblem, and all her jewels; she wears no flowers, no saffron and no sandal paste, and she is covered modestly up to the neck.

The sight brings tears to Ilakkuvaṉ's eyes, because he imagines his own widowed mothers dressed the same way.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1maṅkala aṇiyai nīkki, maṇi aṇi tuṟantu vācak
koṅku alar kōtai māṟṟi, kuṅkumam cāntam koṭṭāp
poṅku vem mulaikaḷ, pūkak kaḻuttoṭu maṟaiyap pōrtta
naṅkaiyaik kaṇṭa vaḷḷal, nayaṉaṅkaḷ paṉippa naintāṉ.