கம்பராமாயணம் 4411 · கிட்கிந்தா 10.53
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
என்னை ஈன்ற இருவரும் - என்னைப் பெற்றெடுத்த தாய்மார் இருவரும், இனையர் என்ன - இத் தன்மையராகவே இருப்பார்கள் என்று; வந்த நினைவினால் - மனத்தில் தோன்றிய நினைவால், அயர்ப்புச் சென்ற - வாட்டம் மிக்க; நெஞ்சினன் - மனத்தையுடையவனாய்; நெடிது நின்றான் - நீண்ட நேரம் ஒன்றும் தோன்றாமல் அந்த இலக்குவன் திகைத்து நின்றான்; வினவினாட்கு எதிர் - (தன்னிடம்) கேள்வி கேட்டவளுக்கு மறுமொழியாக; ஓர் மாற்றம் விளம்பவும் வேண்டும் - ஒரு வார்த்தை விடையாகச் சொல்லவும் வேண்டும்; என்று - என்று கருதி; அப் புனை குழலாட்கு - அழகிய கூந்தலையுடைய அத் தாரையை நோக்க; வந்த காரியம் - வந்த செயல் இன்னதென்று; புகல்வது ஆனான் - சொல்லலானான்.
இலக்குவன் தன் தாயரைப் பற்றிய நினைவால் சிறிது நேரம் ஒன்றும் பேசாமல் இருந்தான்; பின்பு தன்னை வினவியவளுக்கு விடையளிக்காமல் இருப்பது தகுதியாகாது என்று தான் வந்த செயலைக் கூற முற்பட்டான் என்பது. தாயர் இருவர்; தன் தாயான சுமித்திரையும், இராமன் தாயான கோசலையும்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'Such must be the two who bore me': with the thought that came to him,
- his heart sunk in sorrow, he stood a long while;
- then, 'I must give some answer to the one who asked me', he thought,
- and to that lady of adorned hair he began to tell why he had come.
What the poem says
Thinking of his two mothers, Cumittirai, who bore him, and Kōcalai, Irāmaṉ's mother, Ilakkuvaṉ stands silent for a long time.
Then, feeling it would be discourteous to leave Tārai's question unanswered, he begins to explain his errand.