கம்பராமாயணம் 4412 · கிட்கிந்தா 10.54

Section கிட்கிந்தா காண்டம் / 10. கிட்கிந்தைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1"சேனையும் யானும் தேடித் தேவியைத் தருவென் " என்று,
மானவற்கு உரைத்த மாற்றம் மறந்தனன், அருக்கன் மைந்தன்;
"ஆனவன் அமைதி வல்லை அறிக " என, அருளின் வந்தேன்;
மேல்நிலை அனையான் செய்கை விளைந்தவா விளம்புக" என்றான்.

பொருள் · Meaning in Tamil

சேனையும் யானும் - என் சேனையும் நானும்; தேவியைத் தேடித் தருவென் - சீதையைத் தேடிக் கொண்டு சேர்ப்பேன்; என்று மானவற்கு - என்று மனுகுல மன்னனான இராமனுக்கு, அருக்கன் மைந்தன் - சூரியன் மகனான சுக்கிரீவன்; உரைத்த மாற்றம் மறந்தனன் - தான் சொன்ன வார்த்தையை மறந்துவிட்டான்; ஆனவன் அமைதி - அத்தகைய சுக்கிரீவனின் நிலைமையை; வல்லை அறி என - விரைவில் சென்று நீ அறிந்து வருவாயாக என்று (இராமன் என்னிடம்) சொல்ல; அருளின் வந்தேன் - அந்தக் கட்டளைப்படி நான் இங்கே வந்தேன்; மேல்நிலை அனையான் - மேன்மையான அரசாட்சியைப் பெற்ற அச் சுக்கிரீவனது; செய்கை விளைந்தவா - செயல்முறை நிகழ்ந்த விதத்தை; விளம்புக என்றான் - சொல்லுக என்று (தாரையைப் பார்த்து) இலக்குவன் கூறினான்.

சுக்கிரீவன் இராமனிடம் சொன்னபடி வராததால் அவனது செயலை அறிய வந்தேன்; அவனது செயல்தான் என்ன என்று இலக்குவன் தாரையை வினவினான் என்பது. விளைந்தவாறு என்பது ஈறுகெட்டு நின்றது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. '"My army and I will search for the queen and bring her back":
  2. that promise made to the man of Manu's line, the Sun's son has forgotten;
  3. "Go quickly and learn how he stands," my lord said, and by his leave I came;
  4. tell me what has become of the doings of him who sits so high.'

What the poem says

Ilakkuvaṉ states his business. Cukkirīvaṉ, son of the Sun god, promised Irāmaṉ that he and his army would find Cītai and bring her back, and he has forgotten that promise. Irāmaṉ sent Ilakkuvaṉ to find out quickly what the king, now raised so high, is doing. He asks Tārai to tell him.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1"cēṉaiyum yāṉum tēṭit tēviyait taruveṉ" eṉṟu,
māṉavaṟku uraitta māṟṟam maṟantaṉaṉ, arukkaṉ maintaṉ;
"āṉavaṉ amaiti vallai aṟi" eṉa, aruḷiṉ vantēṉ;
mēl nilai aṉaiyāṉ ceykai viḷaintavā viḷampuka" eṉṟāṉ.