கம்பராமாயணம் 4413 · கிட்கிந்தா 10.55
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
ஐய! சீறுவாய் அல்லை - ஐயனே! கோபப்படாமல் இருப்பாயாக; சிறியவர் தீமை செய்தால் - (அறிவு முதலியவற்றால் சிறியவர்கள்) தீமைகள் செய்தால்; ஆறுவாய் - பெரியவனான நீ பொறுத்துக் கோபத்தைத் தணித்துக் கொள்வாயாக, நீ அலால் மற்று ஆர் உளர் - (அவ்வாறு இருப்பதற்கு) உன்னைத் தவிர வேறு யார்தான் இருக்கின்றார்கள்? அயர்ந்தான் அல்லன் - சுக்கிரீவன் தான் சொன்ன சொல்லில் தளர்ந்துவிடவில்லை; உலகம் எங்கும் - (வானர சேனைகளைத் திரட்ட) உலகத்தின் எல்லா இடங்களிலும்; வேறு வேறு தூதரை - தனித் தனியே வானரத் தூதர்களை; விடுத்து - அனுப்பிவைத்து; அவ் எல்லை - அந்த இடங்களிலிருந்து; ஊறுமா நோக்கி - அச் சேனைகள் வந்து சேர்வதை எதிர்பார்த்துக்கொண்டு; தாழ்த்தான் - தாமதித்திருக்கின்றான்; உதவி மாறு உதவி - (நீங்கள் அச் சுக்கிரீவனுக்குச் செய்த உதவிக்குக் கைம்மாறு ஒன்று; உண்டோ - செய்வதற்கு உள்ளதோ (இல்லை).
சிறியவர் தீமை செய்தால் அதைப் பொறுப்பது பெரியவர் கடனாகும். சுக்கிரீவன் செல்வ வாழ்க்கை முதலியவற்றால் மயங்கியுள்ளான் என்று கருதுமாறு இருந்தாலும், அவன் உங்களது உதவியை மறக்கவில்லை; அங்கங்கே தூதரை அனுப்பி வானர சேனையின் வருகையை எதிர்பார்த்துள்ளான்; அதனால் தாமதித்து இருக்கின்றான் என்று தாரை சொன்னாள். உதவி மாறு உதவி: 'செய்யாமற் செய்த உதவி' 'காலத்தினாற் செய்த நன்றி' ஊறு: உறுதல் - முன்னிலை நீண்டது. ஊறுமாறுகர ஈறு குறைந்தது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'Do not be angry, sir! When lesser folk do wrong,
- who is there but you to bear it calmly? He has not grown slack;
- he has sent messengers out to every land, each to a different world,
- and delays, waiting for them to come from those far bounds. Could any help repay your help?'
What the poem says
Tārai pleads for Cukkirīvaṉ. It is the duty of great people to forgive the faults of lesser ones, and who is greater than Ilakkuvaṉ? She insists Cukkirīvaṉ has not forgotten his promise: he has sent messengers to the ends of the earth to gather the monkey armies, and the delay is only because he is waiting for them to arrive.
She ends by admitting that nothing could ever repay what the brothers did for him.