கம்பராமாயணம் 4414 · கிட்கிந்தா 10.56
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
ஆயிர கோடி தூதர் - ஆயிரங் கோடியளவுள்ள எண்ணற்ற தூதர்கள்; அரிக் கணம் அழைப்ப - வானரங்களின் கூட்டத்தை அழைத்து வரும் பொருட்டு; ஆணை போயினர் - (சுக்கிரீவன் கட்டளைப்படி (உலகெங்கும்) போயிருக்கின்றார்கள்; புகுதும் நாளும் புகுந்தது - (அவ் வானர சேனையும்) வந்துசேர வேண்டிய காலமும் நெருங்கியது; புகல் புக்கோர்க்கு - சரணம் அடைந்தவர்களுக்கு; தாயினும் இனிய நீரே - பெற்ற தாயைக் காட்டிலும் அன்பு காட்டும் நீங்களே; தணிதிர் - கோபத்தைத் தணிப்பீராக; அஃது தருமம் - அவ்வாறு பொறுத்தருளுவதே தருமமாகும்; தீயன செய்யாராயின் - ஒருவர் தீய செயல்களைச் செய்யவில்லையானால்; செறுநர் ஆவார் யாவரே - தண்டிப்பதற்குரியவர் எவரோ? ஒருவரும் இல்லையென்றபடி.
ஆல் : இரண்டும் அசை. சுக்கிரீவன் வானர சேனையை வரவழைக்க வேண்டிய ஏற்பாடுகளைச் செய்துள்ளான்; அச்சேனை வருங் காலமும் நெருங்கிவிட்டது; ஒருகால் அவன் செய்ந்நன்றி மறந்துவிட்டான் என்று தோன்றினாலும், உம்மைச் சரணடைந்தவர்க்குத் தாயினும் இனிய நீங்கள் அன்னவனைப் பொறுத்தருளுவதே தருமம் என்றாள் தாரை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'A thousand crores of messengers, sent by his command to summon
- the monkey hosts, have gone; and the day of their arrival has come; to those who take refuge
- you are kinder than a mother: be calm, then; that is dharma;
- if no one ever did wrong, who would there be to punish?'
What the poem says
Tārai goes on. Countless messengers have gone out to call the monkey armies, and the day they are due has come. Irāmaṉ and Ilakkuvaṉ are kinder than a mother to those who take refuge with them, so forgiveness is the right course here.
Her closing question points out that mercy exists for those who have done wrong: if no one ever erred, there would be no one to pardon.