கம்பராமாயணம் 4416 · கிட்கிந்தா 10.58

Section கிட்கிந்தா காண்டம் / 10. கிட்கிந்தைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'செம்மைசேர் உள்ளத் தீர்கள் செய்தபேர் உதவி தீர,
வெம்மைசேர் பகையும் மாற்றி, அரசு வீற்றிருத்தி விட்ட
உம்மையே இகழ்வர் என்னின், எளிமையாய் ஒழிவது ஒன்றோ?
இம்மையே வறுமை எய்தி, எழுமையும் இழப்பர் அன்றே.

பொருள் · Meaning in Tamil

செம்மை சேர் உள்ளத்தீர்கள் - நேர்மையான சிறந்த மனத்தையுடையவர்களான நீங்கள்; செய்த பேருதவி - (சுக்கிரீவனுக்குச்) செய்த பெரிய உதவி; தீரா - (என்றென்றும்) அழியாமல் இருக்கும்படி; வெம்மைசேர் பகையும் மாற்றி - மிகக் கடுமையான பகைவனையும் அழித்து; அரசு வீற்றிருக்கவிட்டீர் - அரசாட்சியைப் பெற்றுச் சிறப்பாக அமரும்படி செய்துவிட்டீர்கள்; உம்மையே - (உங்களால் உதவி பெற்றவர்) உங்களையே; இகழ்வர் என்னின் - புறக்கணிப்பார்களானால்; எளிமையாய் - இழிந்த குணத்தோடு பொருந்தி; ஒழிவது ஒன்றோ - பெருமை குலைவது மாத்திரமோ; இம்மையே வறுமை எய்தி - இப்பிறப்பிலேயே வறுமையடைந்து; இருமையும் - இம்மை மறுமைப் பயன்களாகிய இரண்டையும்; இழப்பர் அன்றே - இழந்துவிடுவார்களன்றோ?

செய்த நன்றியை மறந்தவர் இம்மையில் செல்வமும் புகழும் அழிந்து, மறுமையில் நற்கதி பெறாது நரகத்தையும் அடைவர் என்பது. பகை - பண்பாகுபெயர் (இம்மையே - தேற்றேகாரம். வீறு - வேறொருவர்க்கு இல்லாத தனிச் சிறப்பு.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'You of upright hearts did him a great and lasting kindness,
  2. destroyed his cruel enemy, and set him on the throne;
  3. if they scorn you yourselves, will they only sink into disgrace?
  4. Even in this life they will fall into want, and lose both worlds, will they not?'

What the poem says

Tārai acknowledges how much Cukkirīvaṉ owes. With their upright hearts the brothers did him an unforgettable favour: they killed his formidable enemy Vālī and seated him on the throne.

Anyone who scorns such benefactors does more than disgrace himself. He will be ruined in this life and lose the next as well. She is admitting that ingratitude would be fatal, and so suggesting that Cukkirīvaṉ will not be ungrateful.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'cemmai cēr uḷḷattīrkaḷ ceyta pēr utavi tīrā,
vemmai cēr pakaiyum māṟṟi, aracu vīṟṟirukka viṭṭīr
ummaiyē ikaḻvar eṉṉiṉ, eḷimaiyāy oḻivatu oṉṟō?
immaiyē vaṟumai eyti, irumaiyum iḻappar aṉṟē.