கம்பராமாயணம் 4417 · கிட்கிந்தா 10.59
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
ஆண்டு போர் வாலி - அப்பொழுது போரில் வல்ல வாலியின்; ஆற்றல் மாற்றியது - வலிமையை வதைத்தது (வாலியைக் கொன்றது) அம்பு ஒன்று - (நீங்கள் ஏவிய) பாணம் ஒன்றே; ஆயின் துணைவர் வேண்டுமோ - என்றால், (பகைவரையழிக்க) உங்களுக்கு வேறு துணை வேண்டுமோ? நும்பால் வில்லினும் - உங்களிடமுள்ள வில்லைக் காட்டிலும்; மிக்கது உண்டோ - சிறந்த ஒரு துணையும் உள்ளதோ? தேவியைத் தேண்டுவார் - சீதை இருக்கும் இடத்தைத் தேடிக் காண்பாரை மட்டும்; தேடுகின்றீர் - நாடுகின்றீர் (அவ்வளவுதான்); நும் கழல் - உங்கள் திருவடிகளை; புகுந்துளோரும் - சரணடைந்துள்ளவரான சுக்கிரீவன் முதலானோரும்; அதனைச் செவ்வே பூண்டு நின்று - அப் பணியை நல்ல முறையில் ஏற்றுக் கொண்டு செம்மையாகச் செய்து; உய்தற் பாலார் - ஈடேறக் கடமைப்பட்டவராவார்.
உங்களுக்குச் சீதையுள்ள இடத்தைத் தேடியறியத் துணை வேண்டுமேயல்லாமல் பகை வெல்லத் துணை தேவையில்லை. ஆகவே, அப் பணியைச் செய்து முடிக்கக் கடமைப்பட்டவர் சுக்கிரீவன் முதலியோரே என்றாள் தாரை. தேண்டுவார் - தேடுதல் விரித்தல் விகாரம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'If, back then, a single arrow was enough to undo the might of warlike Vālī,
- do you need allies at all? Is there anything with you stronger than your bow?
- You seek only those who can search out the queen; and that task
- those who have taken refuge at your feet must take up truly, and so be saved.'
What the poem says
Tārai ends her plea with a compliment and a pledge. A single arrow killed the mighty Vālī, so Irāmaṉ needs no allies to defeat his enemies; nothing is stronger than his bow. What he needs from the monkeys is only searchers to find out where Cītai is.
That is the task Cukkirīvaṉ and his people, who have taken refuge with Irāmaṉ, are bound to carry out faithfully if they are to be saved.