கம்பராமாயணம் 4418 · கிட்கிந்தா 10.60

Section கிட்கிந்தா காண்டம் / 10. கிட்கிந்தைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1என்று அவள் உரைத்த மாற்றம் யாவையும் இனிது கேட்டு,
நன்று உணர் கேள்வி யாளன், அருள்வர, நாணுக் கொண்டான்,
நின்றனன்; நிற்றலோடும்,"நீத்தனன் முனிவு'என்று உன்னா,
வன் துணை வயிரத் திண்தோள் மாருதி மருங்கின் வந்தான்.

பொருள் · Meaning in Tamil

என்று அவள் உரைத்த - இவ்வாறு அத்தாரை சொன்ன; மாற்றம் யாவையும் - வார்த்தைகளையெல்லாம்; இனிது கேட்டு - கவனமாகக் கேட்டு; நன்று உணர் - தெளிவாக உணர்ந்த; கேள்வியாளன் - (வேதக்) கேள்வியறிவுடைய இலக்குவன்; அருள்வர - கருணை மேலிட; நாண் உள்கொண்டான் நின்றனன் - வெட்கத்தை மனத்தில் கொண்டவனாய் நின்றான்; நிற்றலோடும் 'முனிவு நீத்தனன்' - (அவ்வாறு) நின்ற அளவில் 'இவன் கோபத்தை நீக்கிவிட்டான்!' என்று உன்னி - என்று கருதி; வன்துணை - வலிய போர்த்துணையாகவுள்ள; வயிரத் திண் தோள் மாருதி - உறுதியும் பலமும் கொண்ட தோள்களையுடைய அனுமன்; மருங்கின் - (இலக்குவன் அருகிலே; வந்தான் - வந்து சேர்ந்தான்.

மாற்றம் - சொல்

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Having listened well to every word she spoke,
  2. the man of true learning, compassion rising in him, felt shame within
  3. and stood still; and as he stood there, thinking, 'He has set aside his anger,'
  4. Māruti, the strong ally with diamond-hard shoulders, came to his side.

What the poem says

Ilakkuvaṉ, a man of learning and judgement, takes in everything Tārai has said. Compassion fills him and he stands quiet, a little ashamed of the fury with which he came.

Seeing that his anger has passed, Aṉumaṉ, son of the Wind, a mighty ally with diamond-strong shoulders, steps forward to speak to him.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1eṉṟu avaḷ uraitta māṟṟam yāvaiyum iṉitu kēṭṭu,
naṉṟu uṇar kēḷviyāḷaṉ, aruḷvara, nāṇ uṭkoṇṭāṉ,
niṉṟaṉaṉ; niṟṟalōṭum, "nīttaṉaṉ muṉivu' eṉṟu uṉṉi,
vaṉ tuṇai vayirat tiṇ tōḷ māruti maruṅkiṉ vantāṉ.