கம்பராமாயணம் 4428 · கிட்கிந்தா 10.70
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
தேவியைக் குறித்து - சீதையை (இராவணன் கவர்ந்து சென்றதை)க் குறித்து; செற்ற சீற்றமும் - கறுவு கொண்ட சினமும்; மானத் தீயும் - மானமாகிய நெருப்பும்; ஐயனை ஆவியை - இராமனது உயிரை; குறித்து நின்றது - பற்றி வருத்தி நின்றன; அதனைக் கண்டேன் - அவ்வாறு வருத்துவதை (நேரிலே) கண்ட நான்; கோ இயல் தருமம் நீங்க - அரசர்களுக்குரிய தருமம் அழிய; கொடுமையோடு உறவு கூடி - கொடுந்தன்மையோடு உறவு கொண்டாடி, பாவியர்க்கு ஏற்ற செய்கை - கொடிய பாவியர்க்குரிய செயல்களை; கருதுவன் - செய்யக் கருதியுள்ளேன்; பழியும் பாரேன் - (அதனால் எனக்கு வரக் கூடிய) பழியையும் சிறிதும் கருதமாட்டேன்.
இராவணன் சீதையைக் கவர்ந்த செயல் இராமனை மிக வருத்தியது. அதனை நேரில் கண்ட இலக்குவன் தனக்கு நேரும் சீற்றத்தையும்; அதன் விளைவுகளையும் எடுத்துரைக்கின்றான். காலம் பார்த்துச் சினம் ஆறியிருத்தல் அரசனுக்குக் கடமையாயிருக்க, இராமனுக்கு நேர்ந்த துன்பங்களைக் கண்டு, ஆற்றாமல் இலக்குவன் 'கோவியல் தருமம் நீங்க... பாவியர்க்கு ஏற்ற செய்கை கருதுவன்' என்றான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'The burning rage and the fire of wounded honour over the queen
- have fastened on my lord's very life; and I, who have seen it,
- would cast aside the dharma proper to kings, take up with cruelty,
- and think of deeds fit only for sinners; I would not care about the blame.'
What the poem says
Ilakkuvaṉ explains why he came in such fury. He has watched Irāmaṉ being eaten away by anger and wounded honour over Cītai's abduction, until his very life seemed at risk.
Seeing that, Ilakkuvaṉ admits, he would abandon the restraint expected of a prince, embrace cruelty and do deeds fit for sinners, without caring how he would be blamed. A king ought to wait for the right time, but his brother's suffering had overwhelmed him.