கம்பராமாயணம் 4427 · கிட்கிந்தா 10.69
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
அனையது கருதி - (இவ்வாறு) அதைப் பற்றிச் சிந்தித்து; பின்னர் - பின்பு; வனை கழல் வயிரத் திண்தோள் - வீரக் கழல் பூண்ட கால்களையும், மிக்க வலிமையான தோள்களையும் உடைய; மன் இளங்குமரன் - இளவரசனான இலக்குவன்; அரிக்குலத்தவனை நோக்கி - வானர குலத்தைச் சேர்ந்த அனுமனைப் பார்த்து; இன்னே நின்பால் - இப்பொழுதே உன்னிடம்; ஒரு மாற்றம் நிகழ்த்துவது உளது - (நான்) ஒன்று கூற வேண்டியுள்ளது; இனையன - கூறும் இந்த வார்த்தைகள்; உணர்தற்கு ஏற்ற - (நீ) உணர்ந்து அறிவதற்குத் தகுதியுடையவை; எண்ணிய நீதி - (இவ்வார்த்தைகள்) எண்ணித் துணிந்த நீதியின்பாற் பட்டவையாகும்; என்னா சொல்வான் - என்று சொல்லத் தொடங்கினான்.
அனையது - சுக்கிரீவன் இராமனது ஆணையை மீறாதிருந்ததும், அவனுக்குக் கிடைத்த செல்வம் சிறுமை செய்தது என்பது. செல்வம் பெற்றவர்க்குப் பல்வேறு மாறாட்டங்கள் நிகழக் கூடும்; அதனால் பல தீங்குகள் விளைய வாய்ப்புள்ளது. கழல் - தானியாகுபெயர்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Having thought this through, he then looked at the one of the monkey race:
- 'There is something I must say to you right now; to you
- these words are fit to be understood; it is considered justice,' and so
- the young prince, of the anklet-bound feet and strong diamond shoulders, spoke:
What the poem says
Having understood what happened, Ilakkuvaṉ turns to Aṉumaṉ and asks him to listen. What he is about to say is fair and well considered, and Aṉumaṉ is the right person to grasp it. The next verse gives his words.