கம்பராமாயணம் 4426 · கிட்கிந்தா 10.68

Section கிட்கிந்தா காண்டம் / 10. கிட்கிந்தைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

மாருதி மாற்றம் கேட்ட - அனுமன் சொன்ன வார்த்தைகளைக் கேட்ட; மலை புரை வயிரத் தோளான் - மலையைப் போன்ற உறுதியான தோள்களையுடைய இலக்குவன்; தீர்வினை சென்று - தோன்றி மறைகின்ற, நின்ற சீற்றத்தான் - சினத்தின் விடுபட்டு; ஆரியன் அருளின் - (இச் சுக்கிரீவன் இராமனது அருட் பார்வையிலிருந்து; தீர்ந்தான் அல்லன் - (உண்மையாக) நீங்கியவனில்லை; பேர்வு அரிது ஆக - தன்னை விட்டு நீங்க முடியாததும்; வந்து அடுத்த செல்வம் - தன்னை வந்து அடுத்ததும் ஆகிய செல்வம்; செய்த - தந்த; சிறுமையான் - சிறுமையுடையவன்; என்னும் பெற்றி - என்னும் இயல்பை; சிந்தை செய்தான் - மனத்தில் நினைந்தான்.

'இச் சுக்கிரீவன் எங்களை அவமதித்தான் என்று சொல்ல இயலாது. தவிர, தான் சொன்ன தவணைப்படி வராமல் இராமனது ஆணையை மீறவேண்டுமென்ற எண்ணமும் இவனுக்குச் சிறிதும் இல்லை; புதிதாகக் கிடைத்த செல்வச் செருக்கால் தான் செய்ய வேண்டிய செயலை மறந்ததனால் ஏற்பட்டது இது' என்று அனுமன் வார்த்தையால் தெளிவடைந்த இலக்குவனின் சினம் தணிந்தது. தாரையும் இதே கருத்தைச் சொன்னாள் (4325)

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Hearing Māruti's words, he of the mountain-like, diamond-hard shoulders,
  2. his anger now passed and gone, turned it over in his mind:
  3. 'He has not fallen away from the noble one's grace; he is only
  4. made small by the wealth that came to him and that is hard to shake off.'

What the poem says

Aṉumaṉ's words calm Ilakkuvaṉ completely, and he works out the truth of it. Cukkirīvaṉ has not turned against Irāmaṉ or meant to defy him. The sudden wealth and power have dazzled him, so that for a while he forgot what he had to do. Tārai said much the same.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1māruti māṟṟam kēṭṭa malai purai vayirat tōḷāṉ
tīrviṉai ceṉṟu niṉṟa cīṟṟattāṉ, cintai ceytāṉ
'āriyaṉ aruḷiṉ tīrntāṉ allaṉ; vantu aṭutta celvam
pērvu aritākac ceyta ciṟumaiyāṉ' eṉṉum peṟṟi.