கம்பராமாயணம் 4425 · கிட்கிந்தா 10.67

Section கிட்கிந்தா காண்டம் / 10. கிட்கிந்தைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'ஈண்டு, இனி நிற்றல் என்பது இனியது ஓர் இயல்பிற்று அன்றால்;
வேண்டலர் அறிவரேல், நும் கேண்மைதீர் வினையிற்று ஆமால்;
ஆண்தகை ஆளி மொய்ம்பின் ஐய! நீர் அளித்த செல்வம்
காண்டியால் உன்முன் வந்த கவிகுலக் கோனொடு'என்றான்.

பொருள் · Meaning in Tamil

ஆண்தகை - ஆடவருள் சிறந்த; ஆளி மொய்ம்பின் ஐய - சிங்கம் போன்ற வலிமையோடு கூடிய தலைவனே! ஈண்டு இனி - இந்த இடத்தில் இப்போது; நிற்றல் என்பது - (மாறுபாடு கொண்டவன் போல்) நிற்பது; இனியது ஓர் இயல்பிற்று அன்று - நன்மை தரும் ஒரு தன்மையுடையதாக ஆகாது; வேண்டலர் அறிவரேல் - பகைவர் அறிவாரானால்; நும் கேண்மை - உமது நட்பு; தீர் வினையிற்று ஆம் - கெடுவதற்கான செயலாய் முடியும்; நீர் அளித்த செல்வம் - (வாலியைக் கொன்று) நீங்கள் தந்த செல்வத்தையும்; உன்முன் வந்த - உனக்கு முன்பு பிறந்தவனான; கவிக் குலக் கோனொடு - வானர குல மன்னவனாகிய சுக்கிரீவனையும்; காண்டி - (நீ) உள்ளே வந்து காண்பாயாக; என்றான் - என்று அனுமன் கூறினான்.

ஓர்: அசை. 'வானரங்கள் வாயிலையடைத்துக் குன்றுகளை அடுக்கின. ஏனெனில், உனது சீற்றத்தைக் கண்டு அஞ்சியதேயாகும். ஆனால் நீ அவ்வாறு கருதாமல் உன்னோடு மாறுபாடு கொண்டு செய்ததாகக் கருதி ஓர் அன்னியன் போல இங்கே நிற்கிறாய்! இப்படி நிற்பதைப் பகைவர் பார்த்தால் உனது சீற்றத்தை மேலும் வளரச் செய்து நம் இரு திறத்தார்க்குமுள்ள நட்பைக் கெடுப்பதற்கு முயல்வார்கள். ஆதலால், நீ உள்ளே வந்து நீங்கள் உதவிய செல்வத்தால் சிறப்பும் பெருமையும் பெற்றுள்ள சுக்கிரீவனைப் பார்த்து உன் கோபத்தைத் தணிவிப்பாய்' என்றான் அனுமன். 'உன் தம்முனைச் சார்தி': தம்முன் - தமையன்; சுக்கிரீவன் இலக்குவனால் தமையன் முறையாகக் கருதப்படுபவன்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'To stand here any longer is not a happy thing;
  2. if your enemies came to know of it, it would be a deed that undoes friendship;
  3. sir, finest of men, with the strength of a lion,
  4. come and see the wealth you bestowed, together with the monkey king, your elder,' he said.

What the poem says

Aṉumaṉ urges Ilakkuvaṉ not to remain standing outside like a stranger with a grievance. If their enemies heard that he was waiting at the gate in anger, they would use it to stir up trouble and break the alliance.

He invites Ilakkuvaṉ in to see the kingdom the brothers gave and to meet Cukkirīvaṉ, whom he calls Ilakkuvaṉ's elder, as Ilakkuvaṉ regards him as an older brother.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'īṇṭu, iṉi niṟṟal eṉpatu iṉiyatu ōr iyalpiṟṟu aṉṟāl;
vēṇṭalar aṟivarēṉum kēṇmai tīr viṉaiyiṟṟu āmāl;
āṇ takai āḷi moympiṉ aiya! nīr aḷitta celvam
kāṇṭiyāl uṉmuṉ vanta kavikkulak kōṉoṭu' eṉṟāṉ.