கம்பராமாயணம் 4424 · கிட்கிந்தா 10.66
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
மதயானை அனைய மைந்த - மதங்கொண்ட யானையைப் போன்ற வீரனே! உதவாமல் ஒருவன் செய்த - (தான் ஒருவனுக்கு) முன்பு எந்த உதவியும் செய்யாமலிருக்க(த் தனக்கு) அவன் செய்த; உதவிக்குக் கைம்மாறு ஆக - உதவிக்கு உதவியாக; சிதையாத செருவில் - கெடுதல் இல்லாத போரில்; அன்னான்முன் சென்று - (அவனுக்குத் துணையாக) முன்னே சென்று; செறுநர் மார்பில் - (அவனுடைய) பகைவர்களின் மார்பில்; உதையானேல் - படைக்கலங்களைச் செலுத்தவில்லையென்றால்; உதையுண்டு - (அப் பகைவரின் படைக்கருவிகளால் தான்) அடிபட்டு; ஆவி உலையானேல் - உயிரைப் போக்கவில்லையென்றால், உலகில் மற்றும் - உலகத்தில் வேறு கைம்மாறு; உண்டாகவற்றோ - என்ன உள்ளது? (இல்லை).
உதவி செய்தவனுக்காக ஒருவன் போர்க்களம் சென்று அவன் பகைவரை அழிக்கவேண்டும். அவ்வாறு பொருது அழிக்க முடியாவிட்டால் அப் பகைவரின் கையால் தன் உயிரைப் போக்கிக் கொள்ள வேண்டும்; இவை ஒருவாறு ஈடாகலாம். இவையல்லாமல் உலகில் வேறு கைம்மாறு என்பது வேறு என்ன உள்ளது? ஒப்புமை: 'செய்யாமற் செய்த உதவிக்கு வையகமும் வானகமும் ஆற்றல் அரிது' (குறள்: 101) உதைத்தல்: அம்பைச் செலுத்துதல்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'For help that one man gave to another who had never helped him,
- O hero like a rutting elephant, what other repayment could there be
- than this: in unflinching battle to go before him and strike at the enemy's chest,
- or, struck down himself, to give up his life? Is there any other in the world?'
What the poem says
Aṉumaṉ states what the monkeys owe. Irāmaṉ helped Cukkirīvaṉ without having received any help from him. The only fitting return is to go ahead of his benefactor into battle and strike down his enemies, or die in the attempt.
The commentary again cites the Tirukkuṟaḷ: help given unasked cannot be repaid even with earth and heaven together.