கம்பராமாயணம் 4423 · கிட்கிந்தா 10.65

Section கிட்கிந்தா காண்டம் / 10. கிட்கிந்தைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'மறந்திலன், கவியின் வேந்தன்; வயம் படை வருவிப்பாரைத்
திறம்திறம் ஏவி, அன்னார் சேர்வது பார்த்து, தாழ்த்தான்;
அறம்துணை நுமக்கு உற்றான்தன் வாய்மை, இன்று அழியுமாகில்,
பிறந்திலன் அன்றே? ஒன்றோ நரகமும் பிழைப்பது அன்றால்.

பொருள் · Meaning in Tamil

கவியின் வேந்தன் - வானரங்களுக்கு அரசனான சுக்கிரீவன்; மறந்திலன் - (உங்களது ஆணையை) மறக்கவில்லை; வயப் படை வருவிப்பாரை - வலிமையுள்ள வானரப் படைகளை அழைத்து வரும் தூதுவர்களை; திறம் திறம் ஏவி - தொகுதி தொகுதியாக இடமெங்கும் அனுப்பி; அன்னார் சேர்வது - அவ் வானர வீரர்கள் வந்து சேர்வதை; பார்த்துத் தாழ்த்தான் - எதிர்பார்த்துக் கொண்டிருப்பதால் சிறிது தாமதித்தான்; அறம் துணை நுமக்கு உற்றான் - (அதுவல்லாமல்) தருமத்திற்குத் துணையாகவுள்ள உங்களை அடைந்த சுக்கிரீவன்; தன் வாய்மையை அழிக்கும் ஆயின் - தன் சத்தியநெறியை அழிப்பானாயின்; பிறந்திலன் அன்றே - (சுக்கிரீவன் இவ்வுலகில் பிறந்தும்) பிறவாதவனே ஆவான்; ஒன்றோ - இது மாத்திரமோ? நரகமும் - (அவனுக்கு மறுமையில்) நரகமும்; பிழைப்பது அன்று - தவறாது.

ஆல்: அசை. 'நீங்கள் தருமத்தைக் காப்பவர்கள். அத்தகைய உங்களிடம் சுக்கிரீவன் உறுதியாகச் சொன்ன சொல் தவறுவானானால் அவனது பிறவி பயனுள்ளதாகாது. அது மட்டுமல்லாமல் அவன் தவறாமல் நரகம் அடைவான்' என்று அனுமன் கூறினான் என்பது. பிறப்பின் பயன் சத்தியம் தவறாமல் ஆன்றோர்க்குத் துணை செய்வதான அறம் புரிவதே என்பது இங்கு வற்புறுத்தப்படுகிறது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'The king of the monkeys has not forgotten; those who will bring the mighty armies
  2. he has sent out, troop by troop, and he delays only, watching for them to gather;
  3. if he who won you as dharma's ally should destroy his own truth,
  4. would he not be as one never born? Nor is that all: hell itself would not miss him.'

What the poem says

Aṉumaṉ gives the same explanation as Tārai: Cukkirīvaṉ has not forgotten, but has sent out parties of messengers to bring in the armies and is waiting for them to arrive.

He adds a solemn statement. If Cukkirīvaṉ, who has the protectors of dharma as his allies, ever broke his word, his birth would be wasted, as though he had never been born, and he would certainly go to hell. A life is worth something only if it keeps faith and serves the good.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'maṟantilaṉ, kaviyiṉ vēntaṉ; vayap paṭai varuvippārait
tiṟam tiṟam ēvi, aṉṉār cērvatu pārttut tāḻttāṉ;
aṟam tuṇai numakku uṟṟāṉ taṉ vāymaiyai aḻikkum āyiṉ,
piṟantilaṉ aṉṟō? oṉṟō narakamum piḻaippatu aṉṟāl.