கம்பராமாயணம் 4430 · கிட்கிந்தா 10.72

Section கிட்கிந்தா காண்டம் / 10. கிட்கிந்தைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'உன்னைக் கண்டு, உம்கோன், தன்னை, உற்ற இடத்து உதவும் பெற்றி
என்னைக் கண்டனன் போல் கண்டு, இந்நாள் இடை நெடிது வைகி,
தன்னைக் கொண்டு இருந்தே தாழ்த்தான்; அன்று எனில், தனு ஒன்றாலே
மின்னைக் கண்டனையாள் தன்னை நாடுதல் விலக்கல் பாற்றோ?

பொருள் · Meaning in Tamil

உன்னைக் கண்டு - (இராமன் முதலில்) உன்னைச் சந்தித்ததனால்; உற்ற இடத்து உதவும் பெற்றி - துன்பம் நேர்ந்த காலத்து உதவி செய்யும் தன்மைக்கு; உம்கோன்தன்னை - உங்கள் அரசனான சுக்கிரீவனை; என்னைக் கண்டனன் போல் கண்டு - என்னைத் தம்பியாகக் கொண்டிருப்பது போலத் தம்பியாகக் கொண்டு; இங்கு இத்துணை - இம் மலையில் இவ்வளவு (நாள்கள் வரையில்); நெடிது வைகி - நீண்ட காலம் தங்க; தன்னைக் கொண்டிருந்தே - தன் உயிரை அரிதாகத் தாங்கிக் கொண்டு; தாழ்த்தான் - பொறுத்திருந்தான்; அன்று எனின் - இல்லாவிட்டால்; தனு ஒன்றாலே - தன் வில்லொன்றால்; மின்னைக் கண்டனையாள் தன்னை - மின்னலைப் போன்ற உருவத்தைக் கொண்டவளான சீதையை; நாடுதல் - தேடுதல்; விலக்கற்பாற்றோ - (மற்றவரால்) தடுக்கக் கூடிய தன்மையுடையதோ? (யாராலும் தடுக்க முடியாது).

உன்னைக் கண்டதும் உன்னிடம் அருள் உண்டாக உன்மூலமாக உன் அரசனாகிய சுக்கிரீவனிடம் நட்புக் கொண்டு, இடருற்றபோது அவன் உதவுவான் என்று கருதினான்; என்னிடம் மிக்க பாசம்கொண்டு என்னைப் பாவிப்பது போன்றே அவனையும் உடன் பிறந்தவனாகப் பாவித்து உங்கள் மூலமாக இச் செயலை எளிதில் முடித்துக் கொள்ளலாம் என்று கருதினான், இராமன். அதனால் இதுவரை பொறுத்திருந்தான்; அவன் இவ்வாறு பொறுத்திருந்தது உங்களுக்குப் பெருமையைத் தருவதற்கேயாம்; வல்லமையில்லாமையாலன்று. அவன் நினைந்திருந்தால் தன் வில்லொன்றால் பகைவரை வதைத்துச் சீதையை எளிதிலே மீட்டிருக்கமுடியும் என்று இலக்குவன் அனுமனிடம் கூறினான் என்பது. ஒளியினாலும் (கொடிபோல்) ஒல்கிடும் மென்மையாலும் சீதையை 'மின்னைக் கண்டனையாள்' என்றார்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'Having met you, and seeing in your king one who would help in time of need,
  2. regarding him as he regards me, he has stayed here all this long while,
  3. holding himself in check, and waited; were it not so, with his bow alone
  4. could anyone stop him from searching out her who is like lightning?'

What the poem says

Ilakkuvaṉ explains Irāmaṉ's patience. When he met Aṉumaṉ, he took Cukkirīvaṉ as an ally who would help in need and came to love him like a brother, as he loves Ilakkuvaṉ. So he has stayed on the mountain, holding his grief in check, and waited.

He waited to give the monkeys the honour of helping, not because he lacked strength. With his bow alone he could have found Cītai, slender and bright as lightning, and no one could have stopped him.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'uṉṉaik kaṇṭu, um kōṉtaṉṉai, uṟṟa iṭattu utavum peṟṟi
eṉṉaik kaṇṭaṉaṉpōl kaṇṭu, iṅku it tuṇai neṭitu vaiki,
taṉṉaik koṇṭu iruntē tāḻntāṉ; aṉṟu eṉiṉ, taṉu oṉṟālē
miṉṉaik kaṇṭaṉaiyāḷtaṉṉai nāṭutal vilakkaṟpāṟṟō?