கம்பராமாயணம் 4431 · கிட்கிந்தா 10.73

Section கிட்கிந்தா காண்டம் / 10. கிட்கிந்தைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

வானம் ஒன்றுமோ - ஆகாயம் ஒன்று மட்டுமோ? அன்றி - அதுவல்லாமல்; பதினால் உள்ள உலகமும் - பதினான்காக உள்ளனவாகிய உலகங்களும்; வென்றி மாக்கடல் ஏழும் - வெற்றி பொருந்திய பெரிய ஏழு கடல்களும்; மலை ஏழும் - ஏழு மலைகளும்; உள்ள என்னவே ஆய் நின்றது - இருக்கின்றன என்று சொல்லுமாறு நிற்பதாகிய; ஓர் அண்டத்துள்ளே - ஓர் உலகமாகிய உருண்டைக்குள்ளே (ஏதாவது ஓரிடத்தில்); எனின் - சீதை இருக்கின்றாள் என்றால்; அது நெடிது ஒன்றோ - அந்த இடத்தைத் தேடிக் கண்டுபிடித்து மீட்டு வருவது (இராமனது வில்லுக்கு) பெரிய செயலாகுமோ? அன்று நீர் சொன்ன - (இருந்தாலும்) முன்பு நீங்கள் சொன்ன; மாற்றம் தாழ்வித்தல் - சொல்லை நிறைவேற்றாமல் தாமதம் செய்வது; தருமம் அன்று - (உங்களுக்குத்) தக்க செயல் (தருமம்) ஆகாது.

மிகப் பெரிய அண்ட கோளத்திலே எங்கே இருந்தாலும் தன் வில்லாற்றலால் சீதையை மீட்டுவருவது இராமனுக்கு அரிய செயலாகாது. ஆனாலும் நான் இங்கே சீற்றத்தோடு வந்தது, நீங்கள் முன்பு சொன்ன சொற்படி நடவாமல் தருமத்தைச் சிதைத்துத் தாமதம் செய்ததாலேயாகும் என்றான் இலக்குவன்.

வென்றி மாக்கடல் - ஊழிக் காலத்தில் பொங்கி எழுந்து உலகை அழிக்கக்கூடியது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'Is it only the sky? Besides it, the fourteen worlds,
  2. the seven great conquering oceans and the seven mountains, so that all these
  3. stand within one cosmic egg: if she is anywhere in that, would it be a long task?
  4. But to delay the word you gave that day is not dharma.'

What the poem says

Ilakkuvaṉ stresses that the search is not beyond Irāmaṉ. The whole universe, with its sky, fourteen worlds, seven oceans and seven mountains, is contained in one cosmic egg. Wherever in it Cītai may be, finding and rescuing her with his bow would be no great labour.

His anger came from something else: the monkeys put off keeping the promise they made, and that is a breach of dharma.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'oṉṟumō, vāṉam aṉṟi ulakamum patiṉāl uḷḷa
veṉṟi māk kaṭalum ēḻ ēḻ malai uḷḷa eṉṉavēyāy
niṉṟatu ōr aṇṭattuḷḷē eṉiṉ, atu neṭiyatu oṉṟō?
aṉṟu nīr coṉṉa māṟṟam tāḻvittal tarumam aṉṟāl.