கம்பராமாயணம் 4432 · கிட்கிந்தா 10.74
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
தாழ்வித்தீர் அல்லீர் - 'நீங்கள் கால தாமதம் செய்தவர்கள் மட்டுமில்லை; பல்நாள் தருக்கிய - பலநாட்களாகச் செருக்குக் கொண்டிருந்த; அரக்கர்தம்மை வாழ்வித்தீர் - அரக்கர்களை வாழச் செய்தீர்கள்; இமையோர்க்கு - தேவர்களுக்கு; இன்னல் வருவித்தீர் - துன்பத்தைத் தந்தீர்கள்; மரபின் தீராக் கேள்வித் தீயாளர் துன்பம் - மரபு முறையிலிருந்து நீங்காத நூற்கேள்வியும், வேள்வித் தீயுமுடைய முனிவர்களுக்குத் துன்பத்தை; கிளர்வித்தீர் - மிகுதியாக்கினீர்கள்; பாவம் தன்னை - பாவங்களை; மூள்வித்தீர் - மேலும் மேலும் வளரச் செய்தீர்கள்; முடிவின் - முடிவாக; முனியாதானை - ஒருகாலும் கோபிக்காத இராமனையும், முனிவித்தீர் - கோபம் அடையுமாறு செய்தீர்கள்! என்றான் - என்று (இலக்குவன்) கூறினான்.
உங்கள் காலதாமதம் அரக்கர்க்குப் பெருவாழ்வையும், தேவர்க்கும் முனிவர்க்கும் துன்பத்தையும் உண்டாக்கி; உங்களுக்குப் பாவங்களைச் சேர்த்து; இராமனுக்குச் சினத்தைத் தோற்றுவித்து, உங்களது கேட்டிற்கும் காரணமாகியது என்று இலக்குவன் உரைத்தான் என்பது. 'கேள்வி' என்பது வேதம்; கேள்வித் தீயாளர் வேத வேள்விக்குத் தீ ஓம்பும் வேதியர் மற்றும் முனிவர்கள்.
தாழ்வித்தீர், வாழ்வித்தீர், வருவித்தீர், கிளர்வித்தீர், மூள்வித்தீர், முனிவித்தீர் என்று 'வி' விகுதியைச் சேர்த்துப் பிறவினைகளாகவே அமைத்திருப்பது சிந்திக்கத்தக்கது. உங்களால் தான் இவ் விளைவுகள் அனைத்தும் ஏற்பட்டன என்பதை இப் பிறவினைகளால் நன்கு வலியுறுத்துகிறார் கவிஞர்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'You have not merely caused delay; the demons, swollen with pride these many days,
- you have let live on; on the immortals you have brought suffering; the sages,
- keepers of the unbroken lore and the sacred fire, you have stirred to greater pain; sin itself
- you have kindled! And in the end you have angered him who is never angry,' he said.
What the poem says
Ilakkuvaṉ lists what the monkeys' delay has caused. It has let the arrogant demons live longer, prolonged the suffering of the gods and of the sages who tend the sacred fires, added to the monkeys' own sin, and finally provoked Irāmaṉ, who is never angry.
In Tamil every verb in the verse is causative, with the ending -vittīr, 'you caused to...'. The repetition drives home that all of this is the monkeys' doing.