கம்பராமாயணம் 4433 · கிட்கிந்தா 10.75

Section கிட்கிந்தா காண்டம் / 10. கிட்கிந்தைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1தோன்றல் அஃது உரைத்தலோடும், மாருதி தொழுது,'தொல்லை
ஆன்ற நூல் அறிஞ! போய பொருள் மனத்து அடைப்பாய் அல்லை;
ஏன்றது முடியேம் என்னின் இறத்தும்; இத் திறத்துக்கு எல்லாம்
சான்று இனி அறனே; போந்து உன் தம்முனைச் சார்தி'என்றான்.

பொருள் · Meaning in Tamil

தோன்றல் - காண்பதற்கு இனியவனான இலக்குவன்; அஃது உரைத்தலோடும் - அவ் வார்த்தைகளைச் சொன்னவுடனே; மாருதி தொழுது - வாயு மைந்தனான அனுமன் (இலக்குவனை) வணங்கி; தொல்லை ஆன்ற நூல் அறிஞ - பழமையான சிறந்த நூல்களை அறிந்தவனே; போன பொருள் - நடந்து முடிந்த செய்திகளை; மனத்து அடைப்பாய் அல்லை - மனத்தில் கொள்ளாதிருப்பாயாக; ஏன்றது முடியேம் என்னின் - (நாங்கள்) ஏற்றுக்கொண்ட பணியைச் செய்யாது விடுத்தோமாயின்; இறத்தும் - உயிர்விடக் கடவோம்; இத் திறத்துக்கு எல்லாம் - இந்த வகைச் செய்திகளுக்கெல்லாம்; இனி அறனே சான்று - இனிச் சாட்சியாக இருப்பது தருமமே; போந்து - உள்ளே வந்து; உன் தம்முனை - உனக்கு அண்ணன் முறையாகும் சுக்கிரீவனிடம்; சார்தி என்றான் - சேர்வாய் என்று சொன்னான்.

அனுமன் இலக்குவனது சினத்தைத் தணிக்க விரும்பிச் 'சீதையைத் தேடுதல் முதலான செயல்களைத் தவறாது செய்துமுடிப்போம்; அவ்வாறு முடியாவிட்டால் நாங்கள் இறந்துபடுவோம்; இச் செயலுக்கு தருமமே சாட்சி' என்றான் என்பது.

சான்று இனி அறனே: நாங்கள் அறம் திறம்பினோம் என்று நீங்கள் இனியும் எங்களைக் கொல்ல வேண்டா. ஏனென்றால் அறமே எங்களைக் கொன்று விடும். 'மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின் அறஞ்சூழும் மற்றவன் கேடு' (குறள் - 204) ஆன்ற - சான்ற என்பதன் மரூஉ. தோன்றல் - பெருமையாளன். ஆண்பாற் சிறப்புப் பெயர்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As the noble one said this, Māruti bowed: 'Master of the ancient,
  2. great texts! Do not keep in your heart what is past;
  3. if we fail in what we undertook, we will die; for all of this
  4. dharma itself is now the witness; come, go to your elder brother,' he said.

What the poem says

Aṉumaṉ bows and asks Ilakkuvaṉ, a man learned in the ancient texts, to let the past go. He gives his word: the monkeys will carry out the task they took on, the search for Cītai, or die trying, and dharma itself is witness to the pledge.

The commentary takes this to mean that the brothers need not punish the monkeys if they fail, because dharma will destroy them. He invites Ilakkuvaṉ in to meet Cukkirīvaṉ, whom he calls his elder.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1tōṉṟal aḵtu uraittalōṭum, māruti toḻutu, 'tollai
āṉṟa nūl aṟiña! pōṉa poruḷ maṉattu aṭaippāy allai;
ēṉṟatu muṭiyēm eṉṉiṉ iṟattum; it tiṟattukku ellām
cāṉṟu iṉi aṟaṉē; pōntu uṉ tammuṉaic cārti' eṉṟāṉ.