கம்பராமாயணம் 4434 · கிட்கிந்தா 10.76
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
பொன்னின் வார் சிலையினானும் - பொன்னால் செய்யப் பெற்ற வில்லைத் தாங்கிய இலக்குவனும் (அனுமன் நோக்க); முன்னும் முயன்றது - 'முன்பும் நாங்கள் மேற்கொண்ட முயற்சியும், நீ சொல்லிற்று அன்றோ - நீ சொல்லியது தானே; இன்னும் - இனிமேலும்; முயற்றுங்காறும் - முயற்சி மேற்கொள்ளுங் காலத்தும்; நீ இசைத்த - நீ சொல்லியதையே; செய்வான் இயைந்தனம் - செய்வதற்கு உடன்படுகிறோம்; என்று கூறி - என்று சொல்லி; அன்னது ஓர் அமைதியான்தன் - (மேலே கூறப்பட்ட) நிலையையுடையவனான சுக்கிரீவனது; அருள் சிறிது அறிவான் நோக்கி - மனநிலையையும் சிறிது தெரிந்து கொள்ளக் கருதி; மாருதியோடும் போனான் - அனுமனுடன் சென்றான்.
சுக்கிரீவன் கார்காலம் நீங்கியவுடன் சீதையைத் தேடுவதற்கு முயலாமல் அந்தப்புரத்தில் உறங்கிக்கிடக்கின்றமையால் அவன் 'அன்னது ஓர் அமைதியான்' எனப்பட்டான். அருள் - சுக்கிரீவன் எங்களிடம் அன்பு காட்டும் விதம். பொன்னின் வார்சிலை - அழகானதும் நீண்டதுமான வில் எனினும் அமையும்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'Was not what we set out to do before done at your word? Until it is carried through,
- we agree, even now, to do as you say,' he said, and
- to learn a little of the mind of the one who was in such a state,
- he of the long golden bow went along with Māruti.
What the poem says
Ilakkuvaṉ accepts Aṉumaṉ's words. The alliance was first made on Aṉumaṉ's advice, and the brothers will go on following it until the work is done.
He goes in with Aṉumaṉ, partly to see for himself how Cukkirīvaṉ, who has been lying idle in his palace, really feels toward Irāmaṉ.