கம்பராமாயணம் 4446 · கிட்கிந்தா 10.88

Section கிட்கிந்தா காண்டம் / 10. கிட்கிந்தைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'உணர்த்தினென் முன்னம்; நீ அஃது உணர்ந்திலை; உணர்வின் தீர்ந்தாய்;
புணர்ப்பது ஒன்று இன்மை நோக்கி, மாருதிக்கு உரைக்கப் போனேன்;
இணர்த் தொகை ஈன்ற பொன்தார் எறுழ் வலித் தடந்தோள் எந்தாய்!
கணத்திடை, அவனை, நீயும் காணுதல் கருமம்'என்றான்.

பொருள் · Meaning in Tamil

இணர்த் தொகை ஈன்ற - பூங்கொத்தின் தொகுதி கொண்டு தொடுக்கப்பட்ட; பொன்தார் - அழகிய மாலையை அணிந்த, எறுழ் வலித் தடந்தோள் எந்தாய் - மிக்க வலிமை பொருந்திய பெரிய தோள்களையுடைய என் தந்தையே! முன்னர் உணர்த்தினேன் - (இலக்குவன் வருகையை உனக்கு) முன்னமே தெரிவித்தேன்; (ஆனால் அப்பொழுது); நீ உணர்வின் தீர்ந்தாய் - நீ உணர்வு மயங்கியிருந்தாய்; அஃது உணர்ந்திலை - (அதனால் நான் சொன்ன) அதனைத் தெரிந்து கொண்டாயில்லை; புணர்ப்பது ஒன்று இன்மை நோக்கி - (ஆகவே) நான் செய்யக் கூடியது வேறு ஒன்றும் இல்லாததை உணர்ந்து; மாருதிக்கு உரைக்கப் போனேன் - அனுமனுக்குச் சொல்லப் போனேன்; கணத்திடை - ஒரு நொடிப் பொழுதிற்குள்; அவனை - அந்த இலக்குவனை; நீயும் காணுதல் - நீயும் சென்று பார்ப்பது; கருமம் என்றான் - செய்ய வேண்டிய செயலாகும் என்று (சுக்கிரீவனிடம் அங்கதன்) கூறினான்.

எறுழ்வலி - ஒரு பொருட் பன்மொழி.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'I told you before; you did not take it in; you were out of your senses;
  2. seeing there was nothing else I could do, I went to tell Māruti;
  3. my father, with your golden garland born of clustered blossoms and your great shoulders of mighty strength,
  4. the thing to do is that you too go and see him at once,' he said.

What the poem says

Aṅkataṉ defends himself against Cukkirīvaṉ's reproach. He did try to warn the king that Ilakkuvaṉ was coming, but Cukkirīvaṉ was too drunk to understand; with no other course open, Aṅkataṉ went to tell Aṉumaṉ (Māruti, son of the Wind). Now, he urges, the king must go and meet Ilakkuvaṉ without a moment's delay.

The phrase for "mighty strength" doubles two words of the same meaning for emphasis.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'uṇarttiṉeṉ muṉṉar; nī aḵtu uṇarntilai; uṇarviṉ tīrntāy;
puṇarppatu oṉṟu iṉmai nōkki, mārutikku uraikkap pōṉēṉ;
iṇart tokai īṉṟa poṉ tār eṟuḻ valit taṭan tōḷ entāy!
kaṇattiṭai, avaṉai, nīyum kāṇutal karumam' eṉṟāṉ.