கம்பராமாயணம் 4445 · கிட்கிந்தா 10.87
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
சொற்றலும் - (அவ்வாறு அங்கதன்) சொன்னவுடனே; அருக்கன் தோன்றல் - சூரியன் மகனான சுக்கிரீவன்; சொல்லுவான் - (பின்வருமாறு) சொல்லத் தொடங்கினான்; அனையவர் சினத்தின் நேர்ந்தால் - 'அந்த இராமலக்குவர் கோபம் கொண்டு எதிர்த்து வந்தால்; மண்ணில் விண்ணில் - இந்த நிலவுலகத்திலோ வானுலகத்திலோ; நிற்க உரியார்கள் யாவர் - அவர்களை எதிர்த்து நிற்கக் கூடியவர்கள் யார்? விற்கு உரியார் - வில் வீரராகிய அந்த இலக்குவன்; இத் தன்மை வெகுளியின் - இவ்வாறு கோபத்துடன்; விரைவின் எய்த - விரைந்து வரும்படியாக; எற்கு உரையாது - (அதனை) எனக்குத் தெரிவிக்காமல்; நீர் ஈது - நீங்கள் இவ்வாறு; இயற்றியது என்கொல் - செய்தது என்ன காரணம் பற்றி?' என்றான் - என்று (அங்கதனை) வினவினான்.
எவ்வுலகத்திலும் ஈடில்லாத மகாவீரர் இராமலக்குவர் என்பதை அறியாமல் வாயில் அடைத்து இலக்குவனோடு போர் செய்ய நின்றதும், அந்த இலக்குவன் பெருஞ்சினத்தோடு வந்தபோது தனக்கு முன்னமே தெரிவியாதிருந்ததும் தவறு என்று சுக்கிரீவன் குறிப்பித்தான் என்பது.
ஈது இயற்றியது - கதவடைத்துக் ப்ப ப் முதலான செயல்களைக்குறிக்கும்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- When he had spoken, the son of the Sun said, 'On earth or in heaven,
- who is there able to stand if such as they come at us in anger?
- When he who owns the bow came swiftly in wrath of this kind,
- why did you do this without telling me?' he said.
What the poem says
Cukkirīvaṉ, son of the Sun god, reproaches Aṅkataṉ and the monkeys. No one in earth or heaven could withstand Irāmaṉ and Ilakkuvaṉ when they are angry; so why, he asks, did they bar the gates and stand ready to fight, and why did nobody warn him at once that Ilakkuvaṉ was coming in such fury?