கம்பராமாயணம் 4444 · கிட்கிந்தா 10.86

Section கிட்கிந்தா காண்டம் / 10. கிட்கிந்தைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

அது - (இலக்குவன் வந்த) அந்தக் காரணத்தை; பெரிது அறிந்த அன்னை - நன்றாக உணர்ந்த என் தாயாகிய தாரை; அன்னவன் சீற்றம் மாற்றி - அந்த இலக்குவனது சினத்தைத் தணித்து; (இலக்குவனைப் பார்த்து); விதிமுறை மறந்தான் அல்லன் - (சுக்கிரீவன் இராமனது) கட்டளையை மறந்தானில்லை; வெம் சினச் சேனை வெள்ளம் - கடுங்கோபத்தையுடைய வானரச் சேனைகளின் பெருந்தொகுதியை; கதுமெனக் கொணரும் - விரைவில் கொண்டு வருவதற்குறிய; தூது - தூதுவர்களை; கல் அதர் செல்ல ஏவி - கற்கள் நிறைந்த மலை வழியில் போகும்படி கட்டளையிட்டு அனுப்பி; எதிர்முறை இருந்தான் - (அந்த வானரப் படையின் வருகையை) எதிர் நோக்கியிருந்தான்': என்றாள் - என்று கூறினாள்; இது இங்குப் புகுந்தது - இது தான் இப்பொழுது இங்கே நடைபெற்ற செயலாகும்"; என்றான் - என்று (சுக்கிரீவனைப் பார்த்து அங்கதன்) சொல்லி முடித்தான்.

தூதர்கள் மூலமாக வானரப் படைகளைத் திரட்டக் காலதாமதமாவதற்கான காரணத்தைக் குறிப்பாக உணர்த்த முற்பட்ட தாரை 'கல்லதர் செல்ல ஏவி' என்றாள்.

சுக்கிரீவன் வானர சேனைகளை வருவிக்கத் தூதர்களை அனுப்பிய செய்தி மீண்டும் மீண்டும் உரைக்கப் பெறுகிறது. தவிர அனுமன் சுக்கிரீவனுக்குக் கார் கால முடிவைக் கூறி எச்சரிக்க, அவன் அனுமனையே எல்லாத் திசைகளுக்கும் அனுப்பக் கட்டளையிட்டான் என்றும், அதன் பின்பு அயர்ந்து விட்டான் என்றும் வான்மீகத்தில் கூறப்பெற்றுள்ளன.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'My mother, who fully understood that, turned aside his wrath, saying,
  2. "He has not forgotten the command; he has sent messengers along stony paths
  3. to bring swiftly the flood of fierce and angry armies,
  4. and is waiting for them to arrive." This is what has come about here,' he said.

What the poem says

Aṅkataṉ finishes his account. Tārai, understanding exactly why Ilakkuvaṉ had come, calmed him by explaining that Cukkirīvaṉ had not forgotten his duty: he had already sent envoys over the rough mountain paths to summon the monkey hosts and was only awaiting their arrival. By mentioning the "stony paths" she hints at the reason for the delay.

In Vālmīki's version, Aṉumaṉ had warned Cukkirīvaṉ that the rains were ending and the king ordered the muster, but then fell back into indulgence.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'atu peritu aṟinta aṉṉai, aṉṉavaṉ cīṟṟam māṟṟi,
"viti muṟai maṟantāṉ allaṉ; veñ ciṉac cēṉai veḷḷam
katumeṉak koṇarum tūtu kal atar cella ēvi,
etir muṟai iruntāṉ" eṉṟāḷ; itu iṅkup pukuntatu' eṉṟāṉ.