கம்பராமாயணம் 4451 · கிட்கிந்தா 10.93
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
அளித்தவர் - (அபயம் என்று அடைந்தவரைப்) பாதுகாத்தவரும்; அஞ்சும் நெஞ்சின் அடைத்தவர் - ஐம்பொறிகளையும் மனத்தில் அடக்கியவர்களும்; அறிவில் மூழ்கி குளித்தவர் - தத்துவ ஞானத்தில் ஆழ்ந்திருப்பவரும்; இன்பம் துன்பம் குறைத்தவர்- இன்ப துன்பங்களில் விருப்பு வெறுப்பு அற்றவரும்; (சுக துக்கங்களைச் சமமாகக் கருதுபவர்); அன்றி - ஆகியோரைத் தவிர; வேரி ஒளித்தவர் உண்டு - கள்ளை மறைவாகக் குடித்து; மீண்டு - பின்பு; இவ் உலகு எலாம் உணர் - இந்த உலகத்தவர் அனைவரும் அறியும்படி; ஓடிக்களித்தவர் - ஓடிக் களிப்புக் கொண்டவர்; எய்தி நின்ற - அடைந்துள்ள; கதி ஒன்று - ஒரு நற்கதியை; கண்டது உண்டோ - (யாரேனும்) பார்த்ததுண்டோ?
அஞ்சி வந்து அடைந்தவரை அபயமென்று காத்தலும் ஐம்பொறிகளை வசப்படுத்துதலும், தத்துவ அறிவு நிரம்புதலும், சுக துக்கங்களை ஒரு நிகராகக் கருதுவதும் ஆகிய இவையே நற்கதியடைவதற்குரிய வழிகளாகுமேயல்லாமல், கள் குடித்தலால் ஒருகாலும் நற்கதியுண்டாகாது என்பது. ஐம்பொறிகளை மனத்தில் அடக்குவது: ஐம்பொறிகளைப் புலன்களின்மேல் செல்லவொட்டாது தடுத்து வைத்தல். வேரி: பாளை முதலியவற்றினின்று குடைந்தெடுக்கப்பட்ட மது, அஞ்சு - ஐந்து என்பதன் போலி.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'Those who protected, those who shut the five senses within the heart, those who plunged
- and bathed in wisdom, those who diminished pleasure and pain — apart from these, has anyone
- seen a single good state reached by those who hid and drank toddy, and then
- ran about reveling so that all this world knew of it?'
What the poem says
Cukkirīvaṉ contrasts the paths that lead to a good destiny with the path of drink. Good states are reached by those who shelter whoever comes to them in fear, who restrain the five senses, who immerse themselves in true knowledge, and who hold pleasure and pain alike. No one has ever seen a drunkard, who drinks in secret and then rampages for all the world to see, reach any such end.