கம்பராமாயணம் 446 · பால 8.39
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
அருவினை அறுக்கும் ஆரிய - உயிர்களைப் பற்றி வருத்தும் அரிய வினைகளை அழித்துக் காக்கும் மேலோனே!; காதலால் கண்டவர் - (இந்தத் தூய்மையான இடத்தை) காதல் கொண்டு காண்பவர்கள்; பிறவி காண்குறார் - பிறவி நோயைக் காணமாட்டார்கள்; ஆதலால் வேதநூல் முறைமையால் - ஆதலாலே, வேதநூல்களில் கூறியமுறைப்படி; வேள்வி முற்றுவேற்கு - வேள்வியை நடத்த நினைத்திருக்கும் எனக்கு; இருக்கற்பாலது - வீற்றிருந்து செய்யத்தக்க இடம்; ஈது அலாது வேறு இல்லை - இவ்விடம் அல்லாது வேறில்லை.
ஈது அலாது வேறு இல்லை: இவ்விடம் அல்லாது வேறில்லை. “ஆதலால் அருவினை அறுக்கும்” என்று கொண்டு, திருமால் இருந்த இடமாதலால் தீவினைகளை அழிக்கவல்லதிது எனக் கூறினும் ஆம் 'அருவினை' கடத்தற்கரிய வினைகளாம். காதல்: அன்பு (பக்தி). வேதநூல்: வேதமும் நூல்களும் (உம்மைத் தொகை). முற்றுதல்: நிறைவேறச் செய்தல். முற்றுவேன்: வினையாலணையும் பெயர். இருக்கல்: இருத்தல். பால்: தன்மை. ஏ: அசை வேள்வி: யாகம். வேள்வி செய்ய ஏற்ற இடமிதுவே என முனிவன் கூறினானென்பது கருத்து.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Therefore it destroys karma hard to escape, noble one;
- those who look on it with love will not see rebirth;
- for me, who would complete a sacrifice by the rule of the Vedas and the treatises,
- there is no place other than this fit to sit in.
What the poem says
Because Viṣṇu himself once dwelt and meditated here, the grove has the power to destroy even the most stubborn karma, and anyone who looks on it with devotion is freed from rebirth.
So, Vicuvāmittiraṉ tells Irāmaṉ, there is no better place for him to perform his Vedic sacrifice. This explains why the sage has brought the princes here.